இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் பலவந்தமாக விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை உரிய முறையில் அங்கு மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்திவருகின்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் சார்பில் சாட்சியமளித்தவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய
சர்மிளா ஹனிபா வடமாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை என்பதை அவர் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மீள்குடியேற்றத்தின்போது, இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படுகின்ற அதே அளவிலான அக்கறை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதிலும் காட்டப்பட வேண்டும் எனவும் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு மூன்றாவது நாளாக குடத்தனை, நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடத்திய விசாரணைகளின்போது ஆயுத முனையில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பாகவே அதிகமானவர்கள் சாட்சியமளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சென்று பிபிசி செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டலாம். அதற்குத் தடையில்லை என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகியபோது அங்கு செல்வதற்கு பிபிசி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இப்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source:BBC
நவம்பர் 14, 2010
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:
வி.பி. கலைராஜன் (அதிமுக):
தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.
சி. ஞானசேகரன் (காங்கிரஸ்):
தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது:
இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும். தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.

கடலூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்
கடலூர் மஞ்சகுப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று 14/11/2010 ( ஞாயிற்றுகிழமை) சிறப்பு வேலை வைப்பு முகாம் நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு முதல் தொழிற் பயிற்சி மற்றும் கலை மற்றும் அறிவயல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் வரை இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.
வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள்
Hyundai India Motors Ltd.,
Nokia India Pvt. Ltd.,
Updater Services Ltd.,
JKM Auto,
Avalon Technologies,
TVS Logistics Services Ltd.,
AE & E Chennai Works Ltd.,
TMI Networks,
Larsen and Toubro,
Sodexo and the Serene Groups.
நேரம் : காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரை
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள்
அசல் சான்றிதழ்,
நகல் சான்றிதழ் 2,
மற்றும் புகைப்படம் 2,
மற்றும் ஓட்டுனர் உரிமம் ( ஓட்டுனர் வேலைக்கு) கொண்டுவரவும்.

நவம்பர் 13, 2010
அமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகையுடன் பணிபுரியும் முதல் சீக்கிய வாலிபர்
அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்களின் மத அடையாளங்களை பயன்படுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதில் சீக்கியர்களுக்கு மட்டும் தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் தங்களின் மத அடையாளமான தலைப்பாகை அணியவும், தாடி வளர்த்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்கண்ட மத அடையாளங்களுடன் சீக்கிய வாலிபர் ஒருவர் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் சிம்ரன் பிரீத் சிங் லம்பா (26). இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்கர் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
பயிற்சியின்போது இவர் தனது மத அடையாளங்களுடன் பங்கேற்றார். இதற்கு கடந்த மார்ச் மாதம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து, அவர் தனது பயிற்சியை முழுமையாக முடித்து அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிகிறார். கடந்த 20 ஆண்டுகளில் மத அடையாளத்துடன் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
சீக்கியர்கள் மீதுள்ள உண்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக லம்பா தெரிவித்துள்ளார்.
Source:MAALAI MALAR

நவம்பர் 12, 2010
செல்போன் கட்டணம் செழுத்த நவீன இயந்திரம்- BSNL
டெலிபோன் மற்றும் செல்போன் கட்டண தொகையை ரொக்கமாக பெறும் நவீன எந்திரத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.எம். எந்திரம்போல் இந்த எந்திரத்தில் செல்போன் அல்லது டெலிபோன் எண்ணை அழுத்தினால் கட்டணம் எவ்வளவு என்பதை காட்டும். அந்தத் தொகையை எந்திரத்தில் போட்டு விட வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு ரசீதை வழங்கும். பில் தொகை ரூ.779 என்றால் ரூ.780 ஆகவோ அல்லது ரூ.800 ஆகவோ செலுத்தினால் மீதி தொகையை திருப்பி தராது. ஆனால் கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு அடுத்த பில் தொகையில் அதை கழித்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
சென்னை பி.எஸ்.என்.எல். முதல் கட்டமாக 3 இடங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அண்ணாநகர், அடையார், கோடம்பாக்கம் ஆகிய வாடிக்கையாளர் சேவை மையத்தில் பில் தொகை வசூலிக்க நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே. நகர், பூக்கடை, ஜி.ஆர். காம்ப்ளக்ஸ், கிரிம்ஸ் ரோடு, கெல்லீஸ், கிண்டி ஆகிய 6 இடங்களில் விரைவில் இந்த வசதி விரிவுப்படுத்தப்படுகிறது.

ஒரு நாள் முஸ்லிமாக மாறிய மிட்சல் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி இந்தோனேஷியா விஜயத்தில் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு விஜயம் செய்த போது தனது தலைக்கு முக்காடு அணிந்துகொண்டார்.ஒபாமா இஸ்லாமிய உலகத்தின் மீது வைத்துள்ள மரியாதையின் வெளிப்பாடாக இது அமைந்திருந்தது.
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பள்ளிவாசலான இந்தோனேஷியாவின் இஸ்திக்லால் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யும் போதே மிச்சல் ஒபாமா தலைக்கு முக்காடு அணிந்துகொண்டார். அமெரிக்க ஜனாதிபதி தனது ஆசிய விஜயத்தில் சில சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தரிசித்து வருகின்றார்.
இந்தோனேஷியாவில் இந்தப் பள்ளிவாசலுக்கு எதிரே ஒரு கிறிஸ்தவ தேவாலயம் இருக்கின்றது. சமய நல்லிணக்கத்துக்கான ஒரு அடையாளமாக இது உள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் இந்த தேவாலயத்துக்கு வரும் பெருந்தொகையான பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பள்ளிவாசல் வளவில் இடமளிக்கப்படுவது வழக்கமாகும்.
source:cnn
நவம்பர் 11, 2010
மக்காவில் இடம்பெற்ற இஸ்லாமிய நல்லிணக்க மாநாடு
சர்வதேச குழு: இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மாநாடொன்று, நவம்பர் 10ம் திகதியாகிய இன்று காலை, புனித மக்கா நகரிலுள்ள ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஈரானிய ஹஜ் அமர்வுக்கான குழுவுக்கு தலைமை தாங்கும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் செய்யித் அலி காஸி அஸ்கர் இம்மாநாட்டில் உரையாற்றினார் என இக்னாவின் கிளை தெரிவிக்கின்றது.
இஸ்லாமிய நல்லிணக்கம் என்பது, உலகெங்கும் பல்வேறு கருத்தரங்குகளும் மாநாடுகளும் இதற்காக நடத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும் என அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.
ஒற்றுமையெனும் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்ற அல்குர்ஆன் வசனம், இஸ்லாமிய நல்லிணக்கத்தை மிகவும் வலியுறுத்தும் ஒரு வசனம் எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளிடையே இத்தகைய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதற்காக உழைப்பதும் மிகப் பெரும் கடமைகளும் நன்மையும் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்களிடையிலான வேற்றுமையும் முரண்பாடும் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் காஸி அஸ்கர் மேலும் குறிப்பிடுகையில், ஒரே இறைவன், ஒரே குர்ஆன், ஒரே இறைத்தூதர் போன்ற பல விடயங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் பொதுப் பண்புகளாக இருக்கையில், முஸ்லிம்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மிகவும் சிறியவையும் அற்பமானவையும் எனவும் அவர் தெரிவித்தார்.
source:இக்னா

கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மணல் விலை கடும் உயர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மணல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், பெண்ணையாறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் தாலுகாக்களில் 9 இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற மணல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்துள்ள மணல் விலை ஒரு யூனிட் 621. மணல் விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு லாரிகளில் விநியோகிக்கும் விலை ஒரு மாதத்துக்கு முன்பு வரை, யூனிட்டுக்கு 1000 வரை இருந்தது.மாட்டு வண்டிகளில் 35 கன அடி மணல் வரை ஏற்றப்படுகிறது.
நகரப் பகுதிகளில் மாட்டு வண்டி மணல் ஒரு லோடு விலை 200 ஆக இருந்தது.வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால் கடலூர் மாவட்ட ஆறுகளில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மணல் விலையை அபரிமிதமாக உயர்த்திவிட்டன.ஒரு மாதத்துக்கு முன்பு வரை, கடலூர் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் ஒரு லாரி (2.5 யூனிட்) அதிகபட்சம் 3 ஆயிரமாக இருந்த மணல் விலை, தற்போது 6 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மாட்டு வண்டி மணல் ஒரு லோடு 350 வரை உயர்ந்து உள்ளது.
செங்கல் விலையும் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மழைக் காலங்களில் செங்கல் சூளைப் பணிகள் நடைபெறாததால் தற்போது தயாரித்து வைத்து இருக்கும் செங்கற்களே விற்பனைக்கு வருகின்றன. ஏற்கெனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்காக, கூடுதலாக செங்கல் தேவைப்பட்டதால், அதைப் பயன்படுத்தி, செங்கல் விலையை வியாபாரிகள் உயர்த்தத் தொடங்கி விட்டனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தட்டுப்பாடும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால், செங்கல் தயாரிப்புப் பணிகள் பெரும்பாலும் முடங்கிவிட்டன.
2 மாதங்களுக்கு முன் அதிகபட்சம் 3 ஆக இருந்த ஒரு செங்கல் விலை தற்போது, 6 ஆக உயர்ந்து இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.செங்கல், மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள் விலைகளும் உயர்ந்து விட்டதால், கட்டுமானத் தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து வருகிறது. அனைத்து பொருள்களின் விலைகளும் உயரும்போது எங்களுக்குக் கூலியையும் உயர்த்துவதுதானே நியாயம் என்கிறார்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்.
இதுகுறித்து கடலூர் நகராட்சி உறுப்பினரும் வீடுகள் கட்டுமானக் காண்ட்ராக்டருமான ராமு மேஸ்திரி கூறுகையில்,
"கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தைத் காரணம் காட்டி செங்கல் விற்பனையாளர்கள் செங்கல் விலையை உயர்த்தி விட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால், செங்கல் விலை இரு மடங்காக அதிகரித்து விட்டது. முன் பணம் கொடுத்தால்தான் செங்கல் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் மணல் விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. சிமென்ட, கம்பி விலைகளும் ஏற்கெனவே உயர்ந்து உள்ளன.
இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. புதிதாகக் கட்டுமானப் பணிகளை தொடங்குவோரும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். கட்டுமானப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது. கொத்தனார் சம்பளம் 350-ல் இருந்து 450 முதல் 500 வரை உயர்ந்து இருக்கிறது. சித்தாள் சம்பளம் 150ல் இருந்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது' என்றார்.

நன்றி:தினமலர்
ஸ்பான்சர்ஷிப்:UAE யில் மாற்றம் வருகிறது
அபுதாபி,நவ:ஒப்பந்தம் காலவதியானால் புதிய வேலையை தேடுவதற்கு அனுமதியளிப்பதுக் குறித்து யு.ஏ.இ தொழில் அமைச்சகம் உடனடியாக முடிவெடுக்கும் என ஃபெடரல் நேசனல் கவுன்சிலின் தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் சஈத் கோபாஷ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் முறையில் சில எதிரான அம்சங்கள் குறித்து பரிசீலிப்பது தொழில் அமைச்சகத்தின் புதிய முடிவென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஸ் அல் கைமாவின் பிரதிநிதி யூசுஃப் உபைத் அலி அல் நுஐமியின் கேள்விக்கு பதிலளிக்கவே இதனை தெரிவித்தார் அமைச்சர்.
தொழிலாளர்களுக்கு சுதந்திரமாக வேலையை மாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் ஸ்பான்சர்ஷிப் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் நுஐமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நவம்பர் 10, 2010
ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பாலியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறது. இன்றும், நாளையும் சிப்பாய் டெக்னீஷியன் நர்சிங் அசிஸ்டென்ட் பணிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் இவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்த்து தேர்வு நடக்கும்.
10ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிப்பாய் பொதுப் பணிக்கான ஆள் தேர்வும், 12, 13 தேதிகளில் சிப்பாய் வர்த்தகப்பணிக்கான ஆள் தேர்வும் நடக்கிறது. பின் 13,14 தேதிகளில் சிப்பாய் கிளார்க், ஸ்டோர்கீப்பர், டெக்னிக்கல் மற்றும் டி.எஸ்.சி., பணிக்கான ஆள் தேர்வு நடக்கிறது. ராணுவத்தில் சேர விரும்புவோர் 17 வயது முதல் 23 வயது வரை இருக்க வேண்டும்.
காலை 5.30 மணிக்கே மைதானத்திற்கு வரவேண்டும். நுழைவு வாயிலில் முதலில் உயரம் சரிபார்த்து தேவையான அளவு இருந்தால் மட்டுமே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பின்னர் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இப்பணிக்காக வருவாய்த் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் மைதானத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நன்றி:Sai Gokula Krishna

சீனாவில் 3 டீ பத்திரிகைகள் அறிமுகம்!!

ஜேம்ஸ் கமரூனின் அவற்றார் திரைப்படம் 3 டீ படங்கள் பற்றிய பிரக்ஞையை உலக அரங்கில் வெகுவாக் கிளப்பிவிட்டுள்ளது தெரிந்ததே. இப்போது தொலைக்காட்சிகள் 3 டீ வடிவில் வருகின்றன. இவற்றில் இருந்து சற்று வேறுபட்டு 3டி முப்பரிமாண படங்கள் கொண்ட பத்திரிகைகள் சீனாவில் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கடந்த 2009 ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில பத்திரிகைகளின் விளம்பரங்கள் முப்பரிமாணத்தில் வருகின்றன. இவற்றைப் பார்ப்பதற்கான கண்ணாடிகளும் பத்திரிகையுடன் சேர்த்தே வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கான சித்திரக் கதைகள், திரைப்பட விளம்பரங்கள் போன்றன பத்திரிகையில் முப்பரிமாண படங்களாக வர ஆரம்பித்திருப்பது பத்திரிகைத் துறைக்கு புதிய பரிமாணத்தையும் விற்பனை வீச்சையும், புது நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்கிறார்கள் சீனப் பத்திரிகையாளர். இணையத்தின் வரவால் தள்ளாடிய பத்திரிகை, சஞ்சிகைகளின் விற்பனைகள் இனி மறுபடியும் புதுவலு பெற இருக்கின்றன.
source:alaikal
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)