Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2011

பதினெட்டு ஆண்டுகள் கழித்து மும்பை கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டனர்


மும்பை:பதினெட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு கடந்த மே 4 அன்று சுலைமான் பேக்கரி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது முஸ்லிம்களை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு நடந்த கலவரத்தில் போலீசார் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அப்பாவி முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி சிறையில் அடைத்தனர்.
மனித உரிமை பாதுகாப்பு கழகத்தின் தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யூசுப் முச்சலாவின் மேற்பார்வையில் வழக்கறிஞர் விஜய் பிரதன் மற்றும் அவருடைய துணை வழக்கறிஞர் சகீர் கான் கூறியதாவது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சௌந்தூர் பல்டோட, அஷ்பாக் அஹ்மத், நூருல் ஹுதா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளதாகவும் ஆனால் அஷ்பாக் அஹ்மத், நூருல் ஹுதா இருவரும் பதினெட்டு வருட சிறைவாசத்தால் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வழக்கில் சுலைமான் பேக்கரி பகுதியை சேர்ந்த 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னால் மும்பை காவல்துறை ஆணையர் RD தியாகி உள்ளிட்ட 17 காவல்துறை அதிகாரிகள் மீது எதிர்மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு கடந்த ஜனவரி 9,1993 ல் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் சகீர் கான் மேலும் கூறுகையில் இந்த வழக்கு தனித்தன்மை வாய்ந்ததாகும் ஒன்பாது அப்பாவி முஸ்லிம்களை கொன்று அந்தப்பழியை 76 முஸ்லிம்களின் மீது போலி வழக்கு புனைந்து கைது செய்த அன்றைய மும்பை காவல்துறை ஆணையர் RD தியாகி தனது ஓய்விற்கு பின்னர் ஷிவ் சேனாவில் இணைந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதாகவும் முன்னால் மும்பை காவல்துறை ஆணையர் RD தியாகி முஹம்மத் அலி ரோட்டில் நடந்த சுலைமான் பேக்கரி சம்பவத்தில் தேவை இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என இன்னொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக கூறினார்.
வழக்கறிஞர் சகீர் கான் மேலும் கூறியதாவது போலீசார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் நிரபராதிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கீழ்நீதிமன்றம் போலீசிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் ஆனால் உயர்நீதிமன்றம் தங்கள் கோரிக்கையை ஏற்று நிரபராதிகளை விடுதலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து காவல்துறை மீது விசாரணைத் தொடங்கும் என தெரிவித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு நடந்த கலவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டதாகும். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனோ 112 வழக்குகளை ஆராய்ந்து அதில் எட்டு வழக்குகளை மறு விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் எதன் அடிப்படையில்  112 வழக்குகளை தேர்ந்தெடுத்தது என்பது இதுவரை நமக்கு தெளிவாகவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...