வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் இறந்தது தொடர்பான புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது, ஒசாமா தான் என்பதை உறுதி செய்யும் வகையில், அவரது சடலத்தை அமெரிக்க படையினர் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை வெளியிடப் போவது இல்லை என, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்து விட்டார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு, அமெரிக்காவிலேயே, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
குடியரசு கட்சி தலைவரும், அமெரிக்க செனட்டருமான லிண்ட்சே கிரகாம் கூறியதாவது:ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டார் என்பது எனக்கும் தெரியும். ஆனால், அதை உறுதி செய்யும் புகைப்படங்களை அரசு வெளியிட மறுத்தது, வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில், அதிபர் எடுத்துள்ள முடிவில் இருந்து, நான் வேறுபடுகிறேன்.பின்லாடன் பதுங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்ட பின், அந்த இடத்தின் மீது, குண்டுவீசி தாக்குதல் நடத்தாமல், கமாண்டோ படையினரை அனுப்பி, தாக்குதல் நடத்தப்பட்டது. பின்லாடன் மரணம் அடைந்தாரா, இல்லையா என்ற சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே, இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது, அவரது புகைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என, அதிபர் ஒபாமா எடுத்திருக்கும் முடிவு, மிகவும் தவறானது.
பின்லாடனின் மரணத்தை, உலக நாடுகளுக்கு, எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்க வேண்டும். அதிபரின் இந்த முடிவின் மூலம், பின்லாடன் இறந்தாரா, இல்லையா என்ற விவாதம் நீண்ட நாட்களுக்கும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு லிண்ட்சே கிரகாம் கூறினார்.குடியரசு கட்சியின் மற்றொரு தலைவர் சாரா பாலின் கூறுகையில், "பின்லாடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டால், அதை பார்த்து, மற்ற பயங்கரவாதிகளுக்கு பயம் ஏற்படும். அமெரிக்காவை அழிக்க நினைப்போருக்கு, அது ஒரு பாடமாக இருக்கும்' என்றார்.இருந்தாலும், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான செனட்டர்கள், ஒசாமா பின்லாடன் புகைப்பட விவகாரத்தில், அதிபர் ஒபாமாவின் முடிவை ஆதரித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...