Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 08, 2011

முடிவுகளுக்கு பின் என்ன? குட்டிக் கட்சிகள் ஆலோசனை

தேர்தல் முடிவுகள் வரும் 13ம் தேதி வெளி வர உள்ள நிலையில், அதற்கு பிறகு எத்தகைய நிலையை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தலில் போட்டியிட்ட குட்டிக் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து, ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடந்து முடிவுகள் வெளிவரப் போகின்றன. இதில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும், எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தமிழகம் முழுவதும் அரசியல்வாதிகளிடம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல இடங்களில், இது தொடர்பாக அவரவர்கள் சக்திக்கு ஏற்ப பெட்டிங் கட்டுவதும் நடந்து வருகிறது. அத்துடன் வழக்கம் போல், ஒரு சிலர் ஒரு பக்கம் மீசையை எடுக்கிறேன், மொட்டை அடிக்கிறேன் என வழக்கமான பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை ஒரு புறம் இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதா கொடநாட்டிலும், ராமதாஸ் ஏற்காட்டிலும், விஜயகாந்த் வெளிநாட்டிலும் ஓய்வு எடுத்து வருகின்றனர். "ஸ்பெக்ட்ரம்' பிரச்னை இருப்பதால், கருணாநிதி மட்டும் ஓய்வுக்காக அவர் வழக்கம் போல் செல்லும் மாமல்லபுரத்திற்கு கூட செல்லாமல், சென்னையிலேயே வழக்கு தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தி.மு.க. - அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற குட்டி கட்சிகள், தேர்தல் முடிவுக்கு பின் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து தங்களுக்குள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. குறிப்பாக, இந்த கட்சிகள், தி.மு.க.,விற்கோ, அ.தி.மு.க.,விற்கோ தனி மெஜாரிட்டி வந்து விடக் கூடாது என்பதில் அதிக ஆர்வமாக உள்ளன.

"தனித்த மெஜாரிட்டியுடன் எந்த கட்சியேனும் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விடும். அதனால், இம்முறை எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல், தங்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கக் கூடிய நிலை வர வேண்டும். அப்போதுதான் புதிதாக அமையும் அரசால் நாம் ஆதாயம் அடைய முடியும் என அவை கருதுகின்றன.இதை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க. - தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற குட்டிக் கட்சிகளின் தலைவர்கள் தத்தமது கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். குட்டிக் கட்சித் தலைவர்களின் ஆசை ஈடேறுமா அல்லது அவை நிராசையாகி விடுமா என்பது போக, போகத் தெரிந்து விடும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...