Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2011

அ.தி.மு.க.,வின் கோட்டையாகியது கடலூர் மாவட்டம்


கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வின் கோட்டையாக மாறியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்த காலங்களில் கூட, கடலூர் மாவட்டத்தில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தது. கடந்த 84ம் ஆண்டு மற்றும் 91ம் ஆண்டு தேர்தல்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைந்தது.

இதற்கு அப்போது கூறப்பட்ட காரணம், கடந்த 84ல், எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், அப்போதைய பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதாலும், 91ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்த காங்., கட்சியின் அப்போதைய பிரதமரான ராஜிவ், தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபத்தினாலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.


அதன் பிறகு நடந்த 89 மற்றும் 96ம் ஆண்டு தேர்தல்களில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2001 தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி அமைத்த போதிலும், மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும், கடந்த 2006 தேர்தலில் நான்கு தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றது.

கடந்த கால தேர்தல்களில் அனுதாப அலையில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், எந்தவித அனுதாப அலையும் வீசாத நிலையில், மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதன் மூலம், மாவட்டம் எப்பொழுதும் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...