Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 01, 2011

அருணாச்சல் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மாயம்

இட்டாநகர்:அருணாச்சல முதல்வர் தோர்ஜி கண்டு உள்ளிட்ட ஐந்து பேர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது.தவாங்கிலிருந்து நேற்று காலை 9.56 மணியளவில் முதல்வருடன் ஹெலிகாப்டர் தலைநகர் இட்டாநகருக்கு பறந்தது.ஹெலிகாப்டர் புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் ஸெலாபாஸ் பிரதேசத்தின் வான் பகுதியில் வைத்து ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு அறுந்துபோனது.

விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் தேடுதலில் ஈடுபட்டபோதும் மோசமான வானிலையை தொடர்ந்து திரும்பியதாக பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ரஞ்சீவ் ஸாஹு தெரிவித்துள்ளார்.காணாமல் போன ஹெலிகாப்டரை ராணுவத்தால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.தரைப்படை மற்றும் விமானப்படையினரும், மாநில போலீசாரும் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக டி.ஐ.ஜி ராபின் ஹிபு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே,தாபோரிஜோ கிராமத்தில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஜெனரல் ஜே.ஜே.சிங்கும்,முதல்வரின் அலுவலகமும் ராணுவத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் பின்னர் பூட்டானில் தரையிறங்கியதாக பின்னர் முதல்வரின் அலுவலகம் தெரிவித்தது.ஆனால், தங்களுடைய பிரதேசத்தில் ஹெலிகாப்டர் இறங்கவில்லை என பூடான் அறிவித்துள்ளது.இதனால் பீதி ஏற்பட்டுள்ளது.காணாமல்போன ஹெலிகாப்டரை தேடும் பணி தொடர்வதாக மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அறிவித்துள்ளார்.ஹெலிகாப்டரை இதுவரை கண்டறிய இயலவில்லை என அருணாச்சல் மாநில அரசும் அறிவித்துள்ளது.காணாமல்போன ஹெலிகாப்டரில் முதல்வருடன், தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி யெஷி லாமு, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி யெஷி சொடாக், கேப்டன்களான ஜெ.எஸ்.பப்பர், கெ.எஸ்.மலிக் ஆகியோர் பயணித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் தவாங்கின் மலைப்பிரதேசத்தில் ஒரு பவன்ஹான்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 17 பேர்கொல்லப்பட்டிருந்தனர்.கடந்த மாதம் காங்டோக்கில் நடந்த மற்றொரு விபத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் வீழ்ந்து நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

ஒரு வருடத்திற்கு முன்புதான் ஆந்திரமாநில முதல்வர் டாக்டர்.ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...