இன்று மேற்குவங்க சட்டசபைக்கான இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகின்றது. இதில் 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. மொத்தம் 97 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று தேர்தல் நடைபெறுகின்ற அனைத்துத் தொகுதிகளும் மொவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும். எனவே, இந்தத் தொகுதிகளில் உச்சகட்டப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்குவங்க சட்டசபைக்கான தேர்தல்கள் 6 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், இதுவரை மொத்தம் ஐந்த கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இன்று நடைபெறும் ஆறாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலுக்கு மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல் இருப்பதால் துணைராணுவப்படையின் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறுகின்றது.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க, மதியம் மூன்று மணி வாக்கிலேயே தேர்தலை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம். எனினும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தேர்தல் அமைதியாக நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள், அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து வரும் 13 தேதி அன்று எண்ணப்படும் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...