மும்பை:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையுடன் தொடர்புடைய பெஸ்ட்பேக்கரி வழக்கில் ஒரே சாட்சியான யாஸ்மின் ஷேக் திடீரென பல்டியடித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர் தீஸ்தாவின் தூண்டுதலால் தவறான சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாக அந்த வழக்கின் ஒரே சாட்சியான ஷேக் யாஸ்மின் பானு மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மும்பை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தண்டணை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் யாஸ்மின், “அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாத் கூறியதன் பேரில் பொய் சாட்சியம் அளித்தேன்.
அவர் எனக்கு பணம் தருவதாகக் கூறினார். அதனால்தான் நிரபராதிகள் மீது குற்றம் சுமத்தி பொய் சாட்சியம் கூறினேன் என யாஸ்மின் கூறியுள்ளார்.மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய குஜராத் இனப்படுகொலை பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இவரது உறவினர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். எனினும் இவரது குடும்பத்தில் அனைவரும் அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியளிக்கவில்லை. இவ்வழக்கில் கடைசிவரை பல்டியடிக்காமலிருந்த் ஒரே சாட்சி யாஸ்மின் ஷேக் ஆவார். ஷேக் குடும்பத்தில் இன்னொரு சாட்சியான ஷாஹிரா ஷேக் ஏற்கனவே தீஸ்தா பொய்கூற தூண்டுகிறார் என நீதிமன்றத்தில் சாட்சியளித்து பல்டியடித்திருந்தார்.
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலையின்போது பெஸ்ட் பேக்கரியில் அபயம் தேடிய 14 பேரை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொடூரமாக எரித்து கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...