Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 18, 2011

சிதம்பரம் தொகுதி வரலாற்றை மாற்றி அமைத்தது மா.கம்யூ.,

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் மா.கம்யூ., முதல் முறையாக கைப்பற்றி 1952ம் ஆண்டு முதல் நடந்த 14 சட்டசபை தேர்தல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிதம்பரம் சட்டசபை தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் நடந்த 13 சட்டசபை தேர்தல்களில் ஐந்து முறை காங்., நான்கு முறை தி.மு.க., மூன்று முறை அ.தி.மு.க., ஒரு முறை த.மா.க., தொகுதியை கைப்பற்றின. தி.மு.க., - அ.தி.மு.க., தொகுதியில் நேரடியாக களமிறங்கி வந்தன. அல்லது இரு கட்சிகளில் ஒரு கட்சி கண்டிப்பாக போட்டியிட்டு வந்தது. தி.மு.க., - காங்., - அ.தி.மு.க., ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் கூட்டணிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தால் வெற்றி பெற்றதில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ.,க்கு ஒதுக்கப்பட்டு தோல்வியை தழுவியது. ஆனால் முதல் முறையாக இந்த தொகுதியில் காங்., - தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியிடாமல் தி.மு.க., கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகமும், அ.தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., கட்சியும் களமிறங்கின. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் புதிய கட்சியின் எம்.எல்.ஏ., கிடைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. சமீப காலமாக சிதம்பரத்தில் வெற்றி பெறும் கட்சிக்கு எதிரணிதான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் கூறப்பட்டதால் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள் இந்த தொகுதியில் போட்டியிட பின்வாங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த தேர்தலில் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,விடம் தோல்வியை தழுவிய மா.கம்யூ., கட்சி இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஆதரவுடன் வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதி அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...