Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 08, 2011

ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு; 70 லட்சம் பேரின் பெயர்கள் இணைய தளத்தில் பதிவு

சென்னை, மே.7-


ஆன்-லைனில் வேலை வாய்ப்பு பதிவு செய்வது தொடர்பாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

15.9.10 முதல் வேலை வாய்ப்பு அலுவலகப்பணிகள் இணைய தளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் மனுதாரர்களின் பதிவு விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், மனுதாரர்கள் வசிக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாட்டால் மனுதாரர்கள் நீண்டதூரம் பயணம் செய்து சென்னையிலுள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மதுரையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால் 15 தென்மாவட்ட முதுகலைப் பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை உடனுக்குடன் தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

எனினும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும் மனுதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவாக வேலை வாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அவ்வலுவலகப்பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...