Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 16, 2011

கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; பிரதமர்- அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகாவில் அரசியலமைப்புக்குட்பட்டு ஆட்சி நடக்கவில்லை என்றும், இங்கு லஞ்சம், ஊழல் மலிந்து விட்டதாகவும், எனவே இங்கு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும் என கவர்னர் பரத்வாஜ் ரிப்போர்ட் அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகம் பெற்றுக்கொண்ட இந்த ரிப்போர்ட்டை அலசி ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில் கவர்னர் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கவர்னர் மாளிகை முன்பு முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று மதியம் 12 மணி அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் மூத்த அமைசச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டில்லியிலும், கர்நாடக மாநிலத்திலும் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. ரெட்டி சகோதரர்கள் முதல் உள்கட்சியில் அதிருப்பதி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் லஞ்சப்புகார் என பல இன்னல்களை சந்தித்ததார். நேற்றுடன் சுமுகமாக முடிந்தது.
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அந்தர்பல்டி : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பா மீது அதிருப்பதி தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் மற்றும் சுயேச்சை 5 பேர் கவர்னரிடம் மனுக்கொடுத்தனர். இதனையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டார்.பா.ஜ., மற்றும் சபாநாயகர் இணைந்து கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி 16 பேரையும் தகுதி நீக்கம் செய்தனர். இதனால் ஓட்டெடுப்பில் ஓட்டு போடும் தகுதியை இழந்தனர். இதனையடுத்து எடியூரப்பா வெற்றி பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்டில் தகுதியிழந்த எம்.எ,.ஏ.,க்கள் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட் இவர்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனால் மீண்டும் பிரச்னை வெடித்தது. எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய அதிருப்தியை வாபஸ் பெற்றுக்கொண்டு , எடியூரப்பாவுக்கு ஆதரவு அளிப்பதாக அந்தர்பல்டி அடித்து கவர்னரிடம் எழுத்துப்பூர்வமாக கொடுத்தனர்.

இதனால் கவர்னரிடம் இருந்து எவ்வித நெருக்கடியும் வராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவர்னர் பரத்வாஜ் நேற்று மாலை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை அனுப்பினார். இந்த ரிப்போர்ட் குறித்து உள்துறை அமைச்சகம் பரிசிலீத்து வருகிறது . எந்த அளவிற்கு ஆதாராங்கள் உள்ளன என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் முக்கிய முடிவு எடுக்கப்படும். இதனால் பா.ஜ., மத்தியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பா.ஜ., உயர்மட்டக்குழு கூட்டம்: டில்லியில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையில் பா.ஜ., உயர்மட்ட தலைவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர். பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி மற்றும் வெங்கையா நாயுடு உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மன்மோகன்சிங் இன்று அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழுவை கூட்டினார். மூத்த அ‌மைச்சர்கள் பிரணாப் முகர்ஜி , ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கர்நாடாக மாநில விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...