Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 14, 2011

3வது முறையாக முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா அதிமுக ஆட்சியை பிடித்தது

தமிழகத்தில் அதிமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 3வது முறையாக முதல்வராகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. அதன்பின் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு சில தொகுதிகளில் ஓட்டு இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின் அவைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் எண்ணப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தபோதே அதிமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. நேற்று இரவு 8.45 மணி நிலவரப்படி அதிமுக 123 இடங்களில் வெற்றியும், 24 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. மொத்தம் 151 இடங்களை பிடிக்கும் உறுதியான நிலையில் இருந்தது.
அதன் கூட்டணி கட்சிகளான தேமுதிக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, 9 தொகுதிகளில் வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் 6 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 4 இடங்களில் வெற்றி உறுதியாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் 7 தொகுதிகளில் வெற்றியும், 2ல் முன்னிலையும் பெற்றுள்ளது. அதுபோல ம.ம.க 2, புதிய தமிழகம் 2, ச.ம.க. 2, இந்திய குடியரசு கட்சி 1, கொங்கு இளைஞர் பேரவை 1, பார்வர்டு பிளாக் 1 ல் வெற்றி பெற்றுள்ளன. இந்த வகையில் அதிமுக கூட்டணி மொத்தம் 204 இடங்களை பிடித்துள்ளது.

திமுக 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமக 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களை தான் பிடித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, போட்டியிட்ட 10 இடங்களையும் இழந்தது.

ஸ்ரீரங்கத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை ஜெயலலிதா சுமார் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருவாரூரில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரனை விட தி.மு.க. தலைவர் கருணாநிதி 50,249 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துரைமுருகன், ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், சுப.தங்கவேலன், மைதீன்கான், தங்கம் தென்னரசு ஆகிய 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்றவர்கள் தோல்வி அடைந்தனர்.

டிஜிபி போலாநாத், கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது நாளை மாலை பதவி ஏற்பது குறித்து ஆலோசனை நடந்தது. இதற்கிடையில் தேமுதிக 2வது பெரிய கட்சியாக 29 இடங்களைப் பிடித்துள்ளது. அதனால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்று தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...