Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 01, 2011

ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கு

இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் உள்ளன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர், என பிரபல ஆடிட்டர் கணேஷ் மகாதேவன் பேசினார்.


ஐ.டி., துறையின் தற்போதைய போக்கு குறித்து டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மகாதேவன் பேசியதாவது:
அனைத்து துறைகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. 2008-09ம் ஆண்டுகளில் இத்துறை பின்தங்கியது; தற்போது மீண்டும் மேலெழுந்து உள்ளது. பி.இ., படித்தவர்கள் என்றில்லாமல், பி.ஏ., பி.எஸ்.சி., சி.ஏ., என எந்த படிப்பு படித்தவர்களுக்கும் இத்துறையில் மட்டும் தான் வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இத்துறை மட்டுமே அனைவரும் வேலை தர காத்திருக்கிறது.

இனி வரும் பத்தாண்டுகளில் ஐ.டி., துறையில் 75 லட்சம் பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதாவது, ஓராண்டுக்கு 7.5 லட்சம் பணி வாயப்பு, ஆட்கள் தேவைப்படுகின்றனர். இத்துறையில் தற்போது 2.5 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இந்தாண்டு மட்டும் 2.5 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 1.5 லட்சம் பேர் கல்லூரி முடித்து விட்டு வெளியே வந்த புதியவர்கள்.

பஸ் டிக்கெட், அரசு அலுவலகம் என அனைத்து இடங்களும் தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலும் மென்பொருள் சார்ந்தே பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு இப்பணிக்காக மத்திய அரசு 70 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது; 2011-12ம் ஆண்டில், 90 ஆயிரம் கோடி செலவழிக்க உள்ளது. எனவே, ஐ.டி., துறையை படிப்பது நல்ல தேர்வு; வேலைவாய்ப்பு தயாராக இருக்கிறது. இதற்கு உங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.

சராசரியாக மார்க் பெற வேண்டும்; சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்காணல் 10,15 நிமிடங்கள் தான் நடக்கும். அந்நேரத்தில் உங்களை நீங்கள் எவ்வாறு காட்டிக்கொள்கிறீர்கள் என்பதை சார்ந்தே வேலை கிடைக்கிறது. புதுமையை படைத்தல், தகுதி ஆகியவை நேர்காணலின்போது பரிசோதிக்கப்படுகிறது. இதைத்தவிர்த்து, பொது அறிவு, ஆங்கில அறிவு இருக்க வேண்டும்.

70,80 சதவீத கம்பெனிகள் வெளிநாடுகளுக்கு மென்பொருள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களாக உள்ளன. ஆங்கில அறிவு என்பது அவசியம். ஐ.டி., துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்துறையை தேர்ந்தெடுத்து ஆழமாக படியுங்கள், என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...