செப்டம்பர் 28, 2010
காமன்வெல்த் போட்டிக்கு ரூ.71 ஆயிரம் கோடி செலவு!!
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி டெல்லியில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பபட்டது.
அனைத்து பணியிலும் ஊழல், ஸ்டேடியத்தின் மேற்கூரை இடிந்தது, ஸ்டேடியத்துக்குள் நுழையும் நடை மேம்பாலம் இடிந்தது, விளையாட்டு கிராமத்தில் வசதியின்மை உள்பட பல் வேறு குளறுபடி கள் இருந்தது.
தற்போது சில பணிகளை தவிர பெரும்பாலான பணிகள் முடிந்து காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு டெல்லி தயாராகி விட்டது. போட்டி தொடங்க இன்னும் 7 தினங்கள் இருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மொத்த செலவு ரூ.71 ஆயிரம் கோடி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப்போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது. அப்போது அந்தப் போட்டிக்கான பட்ஜெட் ரூ.655 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.71 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவு தொகையைவிட இது 109 மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு பணியிலும் நிர்ணயித்த தொகையைவிட பல மடங்கு அதிகமாகி உள்ளது. துப்பாக்கி சூடும் ஸ்டேடியத்தை புதுப்பிக்க ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால் 13 மடங்கு அதிகமாகி ரூ.169 கோடி செலவானது. தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் தடகள போட்டிகள் நடைபெறும் நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு ரூ.961 கோடி செலவானது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு ரூ.71 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. தேவைதானா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...