Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 19, 2012

ஆன்லைன் தேர்வு முறை - TNPSC அறிவிப்பு.


போட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும்வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன்தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளதுமுதல்கட்டமாகதோட்டக்கலை அதிகாரிஉதவிபொறியாளர்பள்ளி முதுநிலை ஆசிரியர்உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம்செயல்படுத்தப்படுகிறது.

TNPSC சமீப காலமாக போட்டித்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறதுமுக்கியமாக,தேர்வுக்கான ஆண்டுத்திட்டம்இணையவழி விண்ணப்பம்இணையவழி நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்,தேர்வுக்கூடங்களில் வீடியோ பதிவுவினாவுக்கான விடைகள் வெளியிடுதல்இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு,விரைவான தேர்வு முடிவுகள்பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வுவெளிப்படையான தெரிவுமுறை,குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தேர்வுக்கு வருகை புரிந்தோரின் விவரங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இத்தகைய சீர்திருத்தங்களை தொடர்ந்துஅடுத்த கட்டமாக கணினிவழித் தேர்வுகளை (ஆன்லைன் தேர்வுமுறை)கொண்டுவர முடிவு செய்துள்ளதுகணினிவழித் தேர்வு என்பது தற்போது நடைமுறையில் உள்ள OMRவிடைத்தாளில் விடையளிக்கும் கொள் குறிவகை தேர்வு போன்றதாகும்.

கணினி வழித் தேர்வில் கேள்விகளும் விடைகளும் கணினித்திரையில் தோன்றும்விண்ணப்பதாரர்கள்கேள்விக்கான நான்கு விடைகளில் மிகச்சரியான ஒரு விடையினை தேர்வு செய்து கணினியின் Mouse மூலம்கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வகைத் தேர்வில் தேர்வு நேரத்திற்குள் விடைகளை மறு ஆய்வு செய்யவும்மாற்றவும், ஒரு கேள்வியைவிடுத்து அடுத்த கேள் விக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதுவினாவும் விடையும் ஒரு சேரதோன்றுவதால் வினாவுக்கான வரிசை எண் மாற வாய்ப்பில்லைஒன்றுக்கு மேற்பட்ட விடைகளை (Multiple Answer) தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பில்லை.

தேர்வில் இடம்பெறும் கேள்வி மிகப் பாதுகாப்பான முறையில் இணைய வழியாக தேர்வுக்கூடங்களுக்கு தேர்வுதொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னர் அனுப்பப்படுவதாலும்தேர்வர்கள் குறிப்பிடும் விடைகள்உடனுக்குடன் தேர்வாணையத்திலுள்ள கணினியில் பெறப்படுவதாலும் இவ்வகைத் தேர்வு
 மிகவும்பாதுகாப்பானதுகேள்விகளும் விடைகளும் வரிசை முறையின்றி கலந்து (ரேண்டம் முறை)விண்ணப்பதாரர்களுக்கு திரையில் தோன்றச் செய்வதால்விண்ணப்பதாரர்கள் அருகிலிருக்கும் சகவிண்ணப்பதாரர்களைப் பார்த்து விடையளிக்கவும் முடியாது.

விண்ணப்பதாரர்களின் நடவடிக்கைகள் Camera மூலமாகவும்கணினிப் பதிவுகள் மூலமாகவும்கண்காணிக்கப்படுவதால் இவ்வகைத் தேர்வுகள் மிகவும் நம்பிக்கையான முறையிலும் நேர்மையானமுறையிலும் நடைபெறும்.

இந்த வகைத்தேர்வுகளில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டிய வேலை இல்லை என்பதால்தேர்வின்முடிவுகள் விரைவில் வெளியிப்படும்இந்த தேர்வினை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்படியான கணினிஅறிவு தேவையில்லை.

Computer Mouse பயன்படுத்துவதற்கு தெரிந்து இருந்தால் போதுமானதுதேர்வு முடிந்தவுடன் விண்ணப்பதாரர்கள்தாங்கள் சமர்ப்பித்த விடைகளின் விவரங்களை பிரின்ட் செய்து பெற்றுக்கொள்ளலாம்விண்ணப்பதாரர்கள்கணினிவழித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்கு வசதியாக மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்)பக்கங்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களை கணினிவழித் தேர்வுக்கு தயார்செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்இப்பக்கங்களில் விண்ணப்பதாரர்கள் கணினிவழித் தேர்வுகுறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் உள்ள மேற்படி பதவிகளுக்கான அறிவிக்கை அல்லதுகணினிவழித் தேர்வுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு குறித்த சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலை பேசிமூலமாகவோ அல்லது  மின்னஞ்சல் மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்.

கணினிவழி தேர்வுமுறைமுதல் கட்டமாக தோட்டக்கலை அலுவலர்உதவிப் பொறியாளர்முதுநிலை ஆசிரி யர்,பள்ளி உதவி ஆசிரியர் ஆகிய தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளில் கொண்டுவரப்படுகிறது.

இதற்கான தேர்வுகள் 9.12.2012 அன்று நடத்தப்படும்படிப்படியாக அனைத்து வகை தொகுதித்தேர்வுகளிலும்ஆன்லைன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும்தேர்வாணையம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


போட்டி தேர்வுகளை நடத்துவதிலும்அதன் முடிவுகளை வெளியிடுவதிலும் அதிக அக்கறை காட்டும் TNPSC , பணிநியமனங்களில்மு்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மையை வெளிபடுத்த வேண்டும்என்பதே ஒட்டு மொத்த மு்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளதுமு்லிம்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடுவழங்கப்பட்டதில் இருந்துஇன்று வரை மு்லிம்களுக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீடு TNPSC பணிநியமனங்களில் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான மு்லிம்கள் தேர்வு செய்யப்படமுடியும்பொதுப்பிரிவில் தகுதியான மு்லிம்கள் நியமிக்கபட்டு உள்ளனரா என்பதையும் உறுதி செய்யவேண்டும்தேர்வுகளை நடத்துவதில் மட்டும் வெளிப்படை தன்மையை காட்டாமல்தேர்வை நடத்துவதில் இருந்துஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி  நியமனம் வழங்குவது  வரை  வெளிப்படை தன்மையை வெளிபடுத்தாதவரை TNPSC-யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே..

மாணவர் அணி - அஜ்மல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...