புதுடெல்லி, நவ.10-போலியான ஆவணங்களைக் கொடுத்து செல்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து சிம் கார்டு வாங்கி, இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மத்திய தொலைதொடர்புத்துறை செல்போன் சேவை இணைப்புகளைப் பெறுவதற்கு புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.
அந்த வழிமுறைகள் வருமாறு:- * முன்கூட்டியே பணம் கொடுத்து பயன்படுத்தும் ப்ரி பெய்ட் மற்றும் சேவைக்கு பின்னர் பணம் செலுத்துகிற போஸ்ட் பெய்ட் செல்போபேசி இணைப்புகளை பெறுவதற்கு வாடிக்கையாளர் தவறான தகவல்களை கொடுத்தால் அதற்கு செல்பேசி சேவை நிறுவனங்களே பொறுப்பு.
* செல்பேசி சிம் கார்டுகளை விற்பனை செய்கிற சில்லறை விற்பனையாளர், விண்ணப்பதாரரையும், அவரது விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, நான் விண்ணப்பதாரரை நேரில் பார்த்தேன், விண்ணப்பத்துடன் ஒட்டப்பட்டுள்ள உருவப்படத்தை ஒத்துப் பார்த்தேன் என்று சான்றளிக்க வேண்டும்.
* போலியான ஆவணங்கள் தந்து யாரேனும் செல்பேசி சேவை இணைப்பை பெற்று விட்டனர் என செல்பேசி சிம்கார்டு விற்பனையாளர் அறிய வந்தால், இது தொடர்பாக செல்பேசி சேவை நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, 15 நாளில் காவல்துறையினரிடம் புகார் செய்து வழக்கு தொடர வேண்டும்.
* சிம் கார்டு வாங்குவதற்கு வாடிக்கையாளர் அளித்த அடையாளம் மற்றும் முகவரி நகல் சான்று ஆவணங்களை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரி பார்த்து, சில்லறை விற்பனையாளர் கையெழுத்திட வேண்டும்.
* சிம் கார்டு இணைப்புக்குரிய சேவையை வழங்குவதற்கு முன்பாக செல்பேசி சேவை நிறுவனம், பெறப்பட்ட விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் சரியானவை என்று சான்றளிக்க வேண்டும்.
* ஒருவருக்கு தெரியாமல் அவரது அடையாளம், இருப்பிட சான்றுகளை வழங்கி மற்றொருவர் செல்பேசி சிம் கார்டு வாங்கினால், அப்படி செல்பேசி சிம்கார்டினை
விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் மீது செல்பேசி சேவை நிறுவனம் வழக்கு தொடர வேண்டும்.
* தவறு செய்கிற சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மீது செல்பேசி சேவை நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கத்தவறினால், செல்பேசி சேவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...