Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 25, 2012

இந்திய வரலாற்றில் முதன்முறையாக உளவுதுறை தலைவராக ஒரு முஸ்லிம் நியமனம்!

மத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் சந்து பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது. இதனையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பதவி மூப்பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது. இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெயரை உளவுத்துறை தலைவர் பதவிக்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

பதவி மூப்பு வரிசையில் 1976-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஆர்.என். குப்தா, ஒருங்கிணைந்த உளவுப் பிரிவு கமிட்டிக்கும், ராஜ்கோபால் தேசிய போலீஸ் கழக இயக்குனராகவும் பதவி உயர்வுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள ஆசிப் இப்ராகீம் உளவுப்பிரிவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரது பெயர் பிரதமர் தலைமையிலான பணி நியமன கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1977 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ச்சைச் சேர்ந்த ஆசிப் இப்ராகீம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உளவுப்பிரிவில் உள்ள பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதனால் இவரை உளவுப்பிரிவின் புதிய தலைவராக
நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உளவுத்துறையின் தலைவராக ஆசிப் இப்ராகீம் நியமிக்கப்பட்டால் இந்த பதவியை வசிக்கும் முதல் முஸ்லிம் அதிகாரி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-Berunews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...