Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 24, 2012

தொடர் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் முடங்கியது

கடலூர், :கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக நவீன உலகின் வழிகாட்டியாக உள்ள இண்டர்நெட் மையங்கள் நொந்து போயுள்ளது. கட்டணமும் உயர்வு கண்டுள்ளது. உலகின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வளர்ச்சியில் கம்ப்யூட்டர் பயன்பாடு அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இண்டர்நெட் வசதி இன்றியமையா தேவையாக மாறியுள்ளது. கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவையும் இண்டர்நெட் வசதி மூலம் உலகே நம் கையில் இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் உலகம் மாற்றியுள்ளது. மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மின்வெட்டு இந்த தரப்பையும் நொந்து போக செய்துள்ளது.

கம்ப்யூட்டர், லேப்-டாப் வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் இண்டர்நெட் வசதி வைத்துள்ளனர். இவை தவிர நகர்புறங்களில் இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 300 இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரங்களில் இயக்கத்தில் இருக்கும் இந்த மையங்களில் மின்வெட்டின் காரணமாக செயல்பாடு முடங்கியுள்ளது. 70 சதவீத மையங்களில் மின்சாரம் இல்லாத போது அறிவிப்பில்லாத விடுமுறையாக மூடப்படுகிறது. வீட்டிலும் மின்வெட்டால் இண்டர் நெட் சேவையை பெறமுடியாமல் நெட் சென்டர்களுக்கு படையெடுக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இதையடுத்து ஜெனரேட்டர் மூலம் சில இண்டர்நெட் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களிடம் பயன்பாட்டிற்கான கட்டணம் கடலூரில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் இருந்து தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

 இது குறித்து கடலூரில் உள்ள இண்டர்நெட் மைய உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நெட் சென்டர் இயங்கும். இந்த நேரத்தில் தற்போது 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நாள்தோறும் சுமார் ரூ.500 வரை கூடுதல் செலவாகிறது. இதனை
ஈடுசெய்ய வாடிக்கையாளர்களிடம் இண்டர்நெட் பயன்பாட்டிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் செயல்பாடு தொழில்நுட்ப ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...