கெய்ரோ:புரட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை உலகிற்கு எகிப்திய மக்கள் கற்றுக்கொடுத்ததாக 70 ஆண்டுகள் கழித்து எகிப்தின் புகழ் பெற்ற அல் அஸ்ஹர் மஸ்ஜிதில் ஆற்றிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் உலகப்பிரசித்திப் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி கூறினார்.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இளைஞர்களும், பெண்களும், வயோதிகர்களும் இணைந்து ஐக்கியத்துடன் செயல்பட்டதால் புரட்சி சாத்தியமானது என்று கர்ழாவி கூறினார்.
ஆனால், பால் குடிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட எனது சமூகத்தை மிகவும் மிருகத்தனமான முறையில் கொலை செய்யும் பஸ்ஸாருல் ஆஸாதின் செயல்களை வன்மையாக கண்டித்தார் கர்ழாவி. உலகப்புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞரான யூசுஃப் அல் கர்ழாவியின் உரையைக் கேட்க அல் அஸ்ஹரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இளைஞர்கள் அதிக அளவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. நெரிசல் காரணமாக பெருமாம்பாலான மக்கள் மஸ்ஜிதின் வெளியே நின்று உரையை செவிமடுத்தனர். ’70 ஆண்டுகளாக உலகின் பல மஸ்ஜித்களிலும் நான் குத்பா (சிறப்புரை) ஆற்றியுள்ளேன். இப்பொழுது முதன் முதலாக அல் அஸ்ஹரில் குத்பா உரை நிகழ்த்துகிறேன்’ என்று கர்ழாவி தனது உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
’லிபியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது பத்து லட்சம் லிபியா மக்கள் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதே எண்ணிக்கையிலான
மக்கள் திருக்குர்ஆனை மனனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு எத்தனை எகிப்தியர்களை நாம் சுட்டிக்காட்ட இயலும்?’ என்று கர்ழாவி வினவினார்.
SOURCE:thoothuonline

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...