Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2012

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டம்:மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, நவ 27-2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லா தரப்பு மக்களிடமும் ஆதரவை பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏழை மக்கள் வேலை வாய்ப்பை பெறும் உரிமையை நிலைநாட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளது. அதுபோல் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் கணிசமானவர்களுக்கு சொந்த நிலம் என்பது இல்லை. அவர்கள் ஒரு ஏக்கரில் 10-ல் ஒரு பங்கு நிலமாவது வாங்கும் வகையில் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 நிலம் பெறும் உரிமையை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏழைகள் நிலம் பெறுவதை சட்டப்பூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்பதில் தேசிய ஆலோசனைக் குழு தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா தீவிரமாக உள்ளார். ஏழைகள் நிலம் வாங்குவதற்கு வசதியாக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு தனிக்குழுவை உருவாக்கி உள்ளது. அந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், கிஷோர் சந்திரதேவ் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். பிறகு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

 உலகில் எந்த ஒரு நாடும் ஏழைகளுக்கு இப்படி நிலம் கொடுக்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. நிலம்பெறும் உரிமையை இதுவரை எந்த நாடும் சட்டமாக்கவும் இல்லை. இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடமே
உள்ளன. எனவே ஏழைகளுக்கு நிலம் கொடுக்கும் சட்டம் மற்றும் வழி முறைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...