Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 24, 2012

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயம்: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: நாட்டில், புழக்கத்தில் உள்ள, 10 ரூபாய் நோட்டுகளை, படிப்படியாக நாணயங்களாக மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பத்து ரூபாய் தாளின் சராசரி ஆயுள் காலம், 9 - 10 மாதங்கள் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், ஒரு தாளை அச்சிட சராசரியாக 96 காசு செலவாகிறது.குறுகிய காலத்தில் அழிந்து விடக் கூடிய, 10 ரூபாய் தாளை தொடர்ந்து அச்சிடுவதால் செலவு கூடுகிறது. இச்செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட கால அடிப்படையில், 10 ரூபாய் தாளுக்கு பதிலாக, நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில்,கடந்த 2009ம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 10 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிப்பதற்கான செலவு 6.10 ரூபாயாக உள்ளது. உள் நாட்டு கரன்சிகளில், குறிப்பாக சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதற்கான, வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.இதன்படி, சோதனை அடிப்படையில், தலா, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 10 லட்சம் பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிடுவதென்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீர்மானித்துள்ளன. இவ்வாறு நமோ நாராயண் மீனா தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், "கரன்சிகளை அச்சிடுவதில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. நாட்டின் மொத்த தேவையான 1,760 கோடி கரன்சிகள், நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன' என்று தெரிவித்தார்.

நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஏதுமில்லை. எனினும், கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கொடிய செயல்பாடுகளை வேரறுக்க, மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும்
முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இது தொடர்பான பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள், உள்துறை அமைச்சகம் அமைத்த, கள்ளநோட்டு தடுப்பு கூட்டு மையத்தின் மூலம், அவ்வப்போது சீராய்வு செய்யப்பட்டு வருவதாக, சிதம்பரம் மேலும் கூறினார்.
-Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...