வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு அமெரிக்கா விசா அனுமதிக்கக் கோரி பகிரங்கமாக கூறிய ஜோ வால்ஷ், அமெரிக்க பிரதிநிதி சபைக்கு நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இந்திய வம்சாவழியை சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இல்லிநோயில் எட்டாவது காங்கிரஸனல் டிஸ்ட்ரிக்டில் வால்ஷ் போட்டியிட்டார். மனித உரிமை தளத்தில் பணியாற்றும் டம்மி டக்வர்த் இங்கு வெற்றிப்பெற்றார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தலைமையேற்ற மோடிக்கு முதன் முதலாக ஆதரவு குரல் கொடுத்த அமெரிக்க பிரதிநிதி வால்ஷ் ஆவார். 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை காரணமாக அமெரிக்கா, மோடிக்கு விசா அளிக்க மறுத்தது. இதற்கு எதிராக பிரச்சாரம் நடத்திய வால்ஷிற்கு ஆதரவாக இந்தியன் அமெரிக்கன் ஃபார் ஃப்ரீடம் போன்ற சங்க்பரிவார ஆதரவு அமைப்புகள் பெருந்தொகையை செலவழித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. வால்ஷை தோற்கடித்த வாக்காளர்களுக்கு இந்திய-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஷஹீன் கத்தீப் நன்றி தெரிவித்துள்ளார்.
-Thoothuonline

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...