Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 08, 2012

இராமநாதபுரத்தில் வன்முறையை தூண்டத் துடிக்கும் மதவாத சக்திகள்


இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்தவாரம் சில கும்பல் முஸ்லீம்கள் வசிக்கும் சின்னக்கடை தெருவுக்குள் சென்றதையடுத்து சலசலப்பு ஏற்பட்டது. 
நேற்று சில இந்துத்துவ சக்திகள் இராமநாதபுரம் கண்ணன் கோவில் கலசத்தை உடைத்துவிட்டதாகக் கூறி ஊர்வலம் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஏதேனும் ஒரு காரணத்தை கூறி மாவட்டத்தில் பதட்டத்தையும், மத மோதல்களையும் ஏற்படுத்த இந்துத்துவ சக்திகள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோவில் பகுதி வழியாக இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாயுமான சுவாமி கோவில் பகுதி மக்கள் வழி மறித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பினர் மோதிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டது. 

இது தொடர்பான தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளிதரன் மற்றும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் தடுத்து தீவிர விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து தாயுமான சுவாமி கோவில் பகுதியை சேர்ந்த 9 பேர் மீதும், இந்திரா நகரை சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டதால் பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. மாலைமலர் செய்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...