Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 25, 2012

ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை!

ஏதேனும் ஒருபட்டப் படிப்பு முடித்துவிட்டு பாதுகாப்புப் படையில் பணிபுரிய வேண்டும்என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது இந்தியராணுவம். டெக்னிக்கல் பிரிவு, ஆர்மி எஜுக்கேஷன், மிலிட்டரி ஃபார்ம் என்ற மூன்று பிரிவுகளின்கீழ் தகுதியுடைய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். டெக்னிக்கல் பிரிவின்கீழ் சிவில் (மைனிங்மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் உள்பட), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரடக்‌ஷன்(மேனுபேக்ச்சரிங் உள்பட), எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங்போன்ற பிரிவுகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்களில் பணியாற்ற, அந்தத்துறைகளில் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்கவேண்டும்.

 இறுதியாண்டு பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும்விண்ணப்பிக்கலாம். மிலிட்டரி டிரெய்னிங் டைரக்டரேட்டின்கீழ்செயல்படும் ஆண்களுக்கான ஆர்மி எஜுக்கேஷன் கார்ப்ஸில் பணிபுரிய ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, இசை, புவியியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில்எம்.ஏ., படித்தவர்களும் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் முதுநிலைபட்டப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் 23 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்படும்பால், காய்கறி, அரிசி போன்றவை ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்ராணுவ தோட்டம் மற்றும் அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளில் இருந்தேபெறப்படுகிறது. ராணுவத்தின் மிக முக்கிய அங்கமாகச் செயல்படும் இந்த ஆர்மிஃபார்ம் பிரிவில் பணியாற்ற டெரி மற்றும் வேளாண்மையில் பட்டப் படிப்புபடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும்.

 இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்குஉளவியல் திறனறித் தேர்வு (சைக்காலஜிக்கல் ஆப்டிட்யூட் டெஸ்ட்) அலகாபாத், போபால் மற்றும் பெங்களூரு மையங்களில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்துமருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கவிரும்புபவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும்.ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை இரண்டு பிரிண்ட் அவுட்
எடுத்து, ஒன்றில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டி, அதில் கெஜட்டட் அதிகாரியின்சான்றொப்பத்தைப் பெற வேண்டும். மற்றொன்றில் விண்ணப்பதாரரின் பத்தாம்வகுப்பு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் இளநிலை பட்டப் படிப்பில்ஒவ்வொரு செமஸ்டரின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதுநிலை பட்டப் படிப்புபடித்திருந்தால் அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்துஅனுப்ப வேண்டும். இந்தப் பணிகளுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள்மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

 விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 12. தபால் மூலம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 31. விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in

source:http://www.tntjsw.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...