Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 13, 2012

கடலூர் மாவட்ட ஊராட்சிகளுக்கு குடிநீரின் தன்மையை கண்டறிய நுண்கிருமி பரிசோதனை பெட்டி

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தன்மை குறித்து அறிந்து கொள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் பரிசோதனை கூடம் அமைந்துள்ளது. மழைக்காலம் தொடர்ந்து அடிக் கடி குடிநீரின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்டறிய ஊராட்சிகளுக்கு வாய்ப்பு இல் லாமல் உள்ளது.

மேலும் பரிசோதனை செய்ய மாவட்டத்தில் நகர் பகுதி யில் உள்ள பரிசோதனை கூடங்களை நாட வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நிர்வாக பயன்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, சிறு போர்வெல், குடிநீர் பம்பு உள்ளிட்டவைகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தன்மை குறித்து அறிந்துகொள்ள நுண்கிருமி பரிசோதனை பெட்டி மற்றும் குடிநீர் பரிசோதனை பெட்டி கொண்ட ஸ்பெஷல் கிட் வழங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் தலா 5 ஊராட்சிகள் வீதம் 65 ஊராட்சிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் இது போன்று ஸ்பெஷல் கிட் அடுத்த கட்டமாக வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட துறையினர் தெரிவித்தனர். குடிநீர் பரிசோதனை சாதனங்கள் மூலம் குடிநீரின் கடின தன்மை, இரும்பு சத்து, கார தன்மை, உப்பு தன்மை உள்ளிட்ட 17 வகை சோதனைகள் கண்டு பிடிக்கலாம். 100 சோதனைகள் வரை ஒரு கிட் மூலம் மேற்கொள்ளலாம்.

ஒரு ஆண்டு காலம் இந்த சாதனங்களில் உள்ள ரசாயனம் கெடாமல் இருக்கும் என குடிநீர் வடிகால் துறையினர் தெரிவித்தனர். மழை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதன் மூலமும், பல்வேறு நிலைகளிலும் நிலத்தடி நீர் தன்மை மாற்றம் கண்டு வரும் நிலையில் இந்த சாதனங்கள் மூலம் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் உள்ளதாக என்பதை கண்டறிய வழி காணப்பட்டுள்ளது. கட லூரில் நடந்த பயிற்சி முகா மிற்கு மாவட்ட ஊராட்சி கள் இணை இயக்குனர் கதிரேசன் தலைமை தாங்கி னார். கடலூர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரிய நிர்வாக பொறியா ளர் சீனுவாசன், இளநிலை நீர் மதிப்பாளர் சிதம்பரநாதன் பயிற்சி அளித்தனர். ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விளக்கவுரையாற்றினார். திட்டத்தின் தன்மை யால் மாவட்டத்தில் பஞ்சாயத்துக்களில் உள்ள 3 ஆயிரம் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் (ஓஎச்டி) தொடர் கண்காணிப்பு செய்ய வழி காணப் பட்டு உள்ளது.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...