Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 24, 2012

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுவோருக்கு ஸ்பாட் பைன் அமலுக்கு வந்தது

கடலூர், : போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது. செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துகளை தவிர்க்க வும், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றவும், போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறை களை மீறும் 34 விதமான குற்றங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் பின்பற்றப்பட்டு வந்த இந்த முறை தற்போது முதன் முறையாக கடலூர் மாவட் டத்திலும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 34 வித குற்றங்கள்:

பதிவு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறை ரூ. 2, 500 ம் இரண்டாம் முறையாக ரூ 5 ஆயிரமும் அபராதம்.

 காப்பீடு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் இரு சக்கர வாகனங்களுக்கு முதல் முறை ரூ. 500 ம், சொந்த வாகனத்திற்கு ரூ. 700, போக்குவரத்து வாகனத்திற்கு ரூ. 1000, இரண்டாம் முறையாக அனைத்து வாகனங்களுக் கும் ரூ. 1000 மும் அபராதம்.

அளவிற்கு அதிகமாக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் கூடுதலாக எடை டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.

செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது, ஆவணங்களின்றி வாகனங் கள் ஓட்டுவது, தலை கவசமின்றி ஓட்டுவது., போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது, வயது வரம்பினை மீறி சிறுவர் சிறுமியர் வாகனங்களை ஓட்டுவது போன்ற குற்றங்களுக்காக முதல் முறையாக ரூ.100ம் இரண்டாவது முறையாக ரூ. 300ம் அபராதம்.

உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது, சாலையில் அனுமதியின்றி சோதனையோட்டம் நடத்துவது, அனுமதியின்றி வாகனங்களின் வடிவமைப்பை மாற்றுவது, பொய்யான தகவல்களை தருவது போன்ற குற்றங்களுக்காக ரூ. 500 அபராதம்.

வேகமாக வாகனத்தை ஓட்டினால் முதல்முறையாக ரூ. 400 ம், இரண்டாம் முறையாக ரூஆயிரமும் அபராதம். தகுதியற்றவர்கள் வாகனம் ஓட்டினால் முதன் முறையாக ரூ 200, இரண்டாம் முறையாக ரூ 500,

அதிக புகையை கக்கிய வாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தியும் அதிக சத்தம் எழுப்பி ஒலியை மாசுப்படுத்தியும் வாகனம் ஒட்டி னால் முதன் முறை யாக ரூ. 1000 மும், இரண்டாம் முறையாக ரூ. 2000 மும் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

 கடலூரில் நேற்று காலை கடலூர் டவுன்ஹால் அருகே போக்குவரத்து ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து விதிமுறை களை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து
ஸ்பாட் பைன் போட்டனர். முதல் நபராக செல்போன் பேசியபடி பைக்கில் சென்ற வாலிபர் ஸ்பாட் பைன் கட்டினார். ஹெல்மெட் போடாதது உரிய ஆவணங்கள் வைத்திருக்காதது ஆகிய குற்றங் களை சொல்லி ஸ்பாட் பைனாக ரூ. 100 கட்டுமாறு போலீ சார் கூறியதை கேட்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பைனை கட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...