கல்வியில் சிறந்து விளங்கி, தொடர வசதியில்லாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலான ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் புத்த மதத்தினர் பார்சி மதங்களைச் சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மவுலான ஆசாத் கல்வி அமைப்பு மூலம் 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித் தொகை, கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டு உறைவிட கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 767 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறுபான்மையின மாணவியர்கள் 10ம் வகுப்பில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் 2012-13ம் ஆண்டில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
மாணவியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை
இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள், தங்கள் கல்வி நிலையத்தில் 11ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுகளுடன் செயலர், மவுலான ஆசாத் கல்வி பவுண்டேஷன், கெம்ஸ் ரோடு, டில்லி 110 055 என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
for more information : http://maef.nic.in/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...