Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 26, 2012

உலக மக்கள்தொகையை மிஞ்சும் செல்போன்கள்

ஜூலை 26: உலகில் மக்கள்தொகையை விட மொபைல்போன் களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகி விடும் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால், உலக மக்கள் தொகையான 700 கோடியை, மொபைல்போன்களின் எண்ணிக்கை விரைவில் தாண்டும் என தெரிகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 உலகம் முழுவதும், மொபைல் போன்க ளில் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த 2000ஆம் ஆண்டில் நூறு கோடியாக இருந்தது. இது 2012ஆம் ஆண்டில் 600 கோடியை தாண்டியுள்ளது. அவற்றில் 500 கோடி வாடிக்கையாளர்கள், வளரும் நாடுகளில் வசிப்போர். 2000ஆம் ஆண்டில் பத்து பேருக்கு ஒரு செல்போன் என்ற வீதத்தில் செல்போன்களின் எண்ணிக்கை இருந்தது. அதுவே 2011ஆம் ஆண்டு இறுதியில் 10 பேரில் 8 பேரிடம் செல்போன் இருக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் உலக வங்கியின் உறுப்பு நாடுகளில் செல்போன் பயன்பாடு வேகமாக வளர்ந்துள்ளது. அதிலும் 50 சதவீத நாடுகளில், அதாவது 90 நாடுகளில் நூறு சதவீத அளவில் செல்போன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனினும், ஏராளமானோர் 2 அல்லது 3 செல்போன் வைத்திருக்கின் றனர்.

 அதாவது, சிக்கனத்துக் காக அதிக சலுகை தரும் நிறுவனத்தின் சிம்கார்டை யும், இன்கமிங் கால்களுக்கு மட்டும் இன்னொரு சிம் கார்டையும் பயன்படுத்துகின்றனர். எனவே, செல்போன் பயன்பாட்டு
எண்ணிக்கையும், வாடிக்கை யாளர் எண்ணிக்கையும் ஒன்றாக இருக் காது. செல்போன் பயன்பாட்டில் அதிகமாக பேச்சுகள் இடம் பெற்றாலும், கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டிருக் கின்றன. அதே போல், இளைஞர்களே அதிகமாக செல்போன் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...