Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 30, 2012

அஸ்ஸாம் கலவரம்:இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அஸ்ஸாமில் செயல் திறன் இல்லாத முதல்வரை மாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக வேண்டும்.

 மறுவாழ்வு நடவடிக்கைகளை உறுதிச்செய்யும் வரை கலவரம் பாதித்த பகுதிகளை ராணுவத்திடம் மத்திய அரசு ஒப்படைக்கவேண்டும். மத்திய அரசு மெளனம் சாதித்தால் கலவரம் தேசத்தின் இதர பகுதிகளுக்கும் பரவி விடும். பா.ஜ.க மற்றும் சிவசேனாவுடன் ஒப்பிடுகையில் சற்றும் வித்தியாசம் இல்லாத காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் பாதுகாவலன் என கூறுவது கவலைக்குரியது. திப்ருகர்(Dibrugarh), கோலாகட்(Golaghat), ஸிப்ஸாகர்(Sibsagar), தின்சூகியா(Tinsukia), ஜோர்ஹட்(Jorhat) ஆகிய மாவட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தினரை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரித்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்பர் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

 கலவரத்தை தடுக்க அஸ்ஸாம் ஆளுநர் முன்வரவேண்டும். பங்களாதேஷ் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான தாக்குதல் என கூறி அஸ்ஸாம் கலவரத்தை சாதாரணமாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். பெரும்பாலான மக்கள் பல தசாப்தங்களாக இப்பகுதிகளில் வாழும் இந்திய குடிமக்கள் ஆவர். உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் மிகப்பெரிய சிறுபான்மை மக்களின் சொத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதில் தோல்வியை தழுவியுள்ளது. அகிலேஷ் யாதவின் 100 நாட்கள் ஆட்சியில் கோஸிகலான், பிரதாப்கர், பரேலி ஆகிய மூன்று இடங்களில் வகுப்பு வாத கலவரங்கள் நடந்தேறியுள்ளன.

2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில்
முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பது சமாஜ்வாதி கட்சி அரசுக்கு புரியும். முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி குறைந்த பட்சம் சமூக நல்லிணக்கத்தை பேணிக்காப்பதிலாவது வெற்றியடைந்தது.’ இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...