Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்தும் பணத்துக்கு சேவை வரி இல்லை: பிரதமர்

அண்மையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், இமெயில்கள் மூலமாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(என்.ஆர்.ஐ) இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும், அதன் மதிப்பு 12.36 சதவீதமாக இருக்கும் என்றும் செய்தி பரவியது. இதனால் என்.ஆர்.ஐக்கள் கவலையுற்றனர்.

 இந்தியாவில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தினரையும், சொந்த தேசத்தையும் பிரிந்து வளைகுடா நாடுகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வேலைப்பார்க்கும் இந்தியர்களுக்கு இச்செய்தி மன உளைச்சலை ஏற்படுத்தியது. மத்திய அரசால் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட சேவை வரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகையின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் கோடி. இதற்கு சேவை வரி விதிக்கப்படுமானால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பற்றி நிதி அமைச்சகத்திலிருந்து பிரதமர் விவரங்களைக் கேட்டார். பின்னர், வெளிநாடுகளில்
பணி புரியும் இந்தியர்கள் இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகைக்கு சேவை வரி விதிப்பது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கேரள முதல்வரிடம் தெரிவித்தார். எனவே இப்போதுள்ள நிலையே மேலும் தொடரும் என்று உம்மன் சாண்டி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...