Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 07, 2012

சிதம்பரத்தில் விரைவில் ரயில் மறியல்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சிதம்பரம்,: கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வர்-ராமேஸ்வரம் விரைவு ரயில் இருவழிகளிலும் நின்று செல்ல வேண்டும் என்றும், ரயில் நிலையத்தில் கூடுதல் முன்பதிவு கவுண்டர் திறக்க கோரியும், நிலைய மேலாளர் நியமிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட குழு வெங்கடேசன், அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, வர்த்தக சங்க தலைவர் பாண்டியன். செயலாளர் வீரப்பன், பேராசிரியர் இளங்கோ, அணி வணிகர் சங்கத் தலைவர் முத்துக்குமரேசன், செயலாளர் முகமதுயூசூப்அலி ஆகி யோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பவுஜியாபேகம், மாதர் சங்க செயலாளர் ஜெயசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர். 10-வது வட்ட செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார். இதன்பின்னர் பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சிதம்பரம் ரயில் நிலையம் கடந்த 50 ஆண்டுக்கு முன்பு இருந்த அடிப்படை வசதிகள் போல் தான் தற்போது உள்ளது. தற்போது உள்ள நவீன காலத்துக்கேற்ற வசதிகள் இல்லை. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதையாக மாற்றிய பிறகு, மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் இயக்கப்படவில்லை. எனவே ஏற்கனவே இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். அதே போல் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் சிதம்பரத்தில் நிற்பது இல்லை. ரயில்வே நிர்வாகம் தலையிட்டு நிறுத்த ஏற்பாடு செய்ய
வேண்டும். ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முக்கிய அடிப்படை வசதியான கழிப்பறை வசதி இல்லை. பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேணடும். மேலும் சென்னையில் இருந்து சிதம்பரம் வழியாக செங்கோட்டைக்கு பயணிகள் ரயில் இயக்கப்படடது அதனை மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை முதல் மைசூர் வரை இயக்கப்படும் காவேரி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு கடிதம் அளித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை இல்லை. இனியும் நிறைவேற்றாவிடில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...