காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் உள்ளது. இப்பகுதி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலை யில் உள்ளது. இப்பகுதிக்கு அருகே சாலையில் குண்டும் குழியும் காணப்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வந்தது.
ஒரு நாளைக்கு 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள மக்கள் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தினர். ஆனால் நெடுஞ்சாலைதுறை அலட்சியப்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து சாலையை சீர்செய்யும் பணியை நள்ளிரவில் தொடங்கினர். இதே போன்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகே மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் தினந்தோறும் காட்டுமன்னார்கோவில் நகரத்திற்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாலை முடக்கில்தான் கொள்ளுமேட்டை சேர்ந்த ஒரு இலைஞர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது இதுபோல் பல்வேறு விபத்துகளின் கேடயமாக இருக்கும் இந்த வளைவு பகுதியை அரசு சீர்படுத்திதந்தால் சிறப்பாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...