Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 21, 2012

கொள்ளிடம் ஊற்றுநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றின் ஊற்றுநீரை சிதம்பரம் மற்றும் கிள்ளை பகுதிக்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கான்சாகிப் வாய்க்காலுக்கு திருப்பிவிடும் திட்டம் ரூ.58.70 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நிறைவேற்றிட வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (படம்) அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.


கடிதவிவரம்: கொள்ளிடம் ஆற்றில் ஆண்டு முழுவதும் ஊற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
அதே சமயம் சிதம்பரம் வட்டத்தில் கிள்ளைப் பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை.கோடைக் காலங்களில் சிதம்பரம் வட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இக்குறையைப் போக்க கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ஆதனூர் - நாகை மாவட்டம், குமாரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே 83 கண்மாய்களை கொண்ட ஒரு ரெகுலேட்டர் கட்டி, ஊற்றுநீரை தேக்கி பயன்படுத்தவதற்கான திட்டம் ரூ.58.70 கோடி மதிப்பில் 2003-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.இதன் மூலம் 1120 மீட்டர் கனஅடி நீரைத் தேக்க முடியும். வடக்குராஜன் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் அளிக்க முடியும். மேலும் உபரியாக உள்ள முழுநீரையும், கான்சாகிப் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு நீர் அளிக்கவும் திட்டமிடப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 25 ஆயிரம் சாகுபடி செய்யவும், சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கவும், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக மாற்றுவதைத் தடுக்கவும், குடிநீர் பஞ்சத்தைப் போக்கவும் பேருதவியாக அமையும். எனவே கடந்த ஆட்சியாளர்களால் கிடப்பில் போட்டப்பட்ட இத்திட்டத்துக்கு மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...