Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2012

16 ஆண்டுகளுக்கு பின் நாகூர்-நெய்வேலி-பெங்களூர் வழித்தடத்தில் ரயில்

நெய்வேலி ஜூலை 3: செல்லும் நாகூர்-பெங்களூர் பயணிகள் ரயில் 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதால் நெய்வேலி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகூர்-நெய்வேலி-பெங்களூர் இடையே பயணிகள் ரயில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்தது. நெய்வேலி, வடலூர், விருத்தாசலம் பகுதி மக்கள் பெரும்பாலானோர் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இதனை மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகலப்பாதையாக மாற்ற தென்னக ரயில்வே அப்போது முடிவு செய்தது. பின்னர் இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டதால் இந்த மார்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் கடந்த 1996-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டு இங்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கினாலும், பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 2003-ம் ஆண்டு முதல் கடலூர்-நெய்வேலி-விருத்தாசலம் மார்க்கமாக திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், முன்பு இயக்கப்பட்ட நாகூர்-நெய்வேலி-விருத்தாசலம்-சேலம்-பெங்களூர் வழித்தட ரயில் சேவையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று நெய்வேலி பகுதியினர் தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை பரிசீலித்த தென்னக ரயில்வே, மீண்டும் அந்த ரயில் சேவையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, இம்மாதம் 1-ம் தேதியிலிருந்து பெங்களூரிலிருந்து நாகூர் வரை முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், வணிகர்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைக் கொண்டாடும் விதமாக
, திங்கள்கிழமை நெய்வேலி ரயில் நிலையத்துக்கு வந்த அப்பயணிகள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 நெய்வேலி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் தலைமையில் மந்தாரக்குப்பம் வணிகர்கள் இந்த வரவேற்பாடு ஏற்பாடை செய்தனர். தினமும் இயக்கப்படும் இந்த ரயில் பெங்களூரில் காலை 9 மணிக்கு புறப்பட்டு நெய்வேலிக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும். அதே போல், நாகூரில் காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெய்வேலிக்கு காலை 9.15-க்கு வந்தடைந்து, பெங்களூருக்கு மாலை 4.30 மணிக்கு சென்றடையும். நெய்வேலி-பெங்களூர் இடையேயான ரயில் பயணக் கட்டணம் ரூ. 46 ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...