Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 19, 2012

பரவலாக மழை பெய்வதால் ஆடிப்பட்டம் துவங்கியது!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் நம்பிக்கையுடன் மானாவாரி பயிர் செய்யத் துவங்கியுள்ளனர்.விவசாயிகள் பாசனத்தை நம்பி பயிர் செய்வது இறவை பட்டம். மழையை நம்பி பயிர் செய்வது மானாவாரி பட்டம். ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழையின் போது கடலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் எள், மணிலா, சோளம், பருத்தி, கம்பு, கேழ்வரகு, பச்சை பயறு, உளுந்து, துவரை உட்பட பல பயிர்களை மனாவாரியில் பயிர் செய்வது வழக்கம்.

மாவட்டத்தில் திட்டக்குடி, தொழுதூர் பகுதிகளில் அதிக பட்சமாக 30 ஏக்கரில் மானாவாரியில் சோளம், பருத்தி பயிர் செய்யப்படும். பரவலாக மழை தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் நிலத்தை உழுது, அடியுரமிட்டு மானாவாரி பட்டத்தில் பயிர் செய்ய மும்முரமாகி வருகின்றனர்.விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் இறவை பட்டத்தில் பயிர் செய்யப்பட்ட எள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், மானாவாரியிலும் இப்பகுதியில் விவசாயிகள் எள் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேப்போன்று இப்பகுதிகளில் மக்காசோளம், துவரை, கம்பு, மணிலா, வரகு, திணை உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.

91,950 ஏக்கர் மானாவாரி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மானாவாரியில் 71 ஆயிரத்து 250 ஏக்கரில் கம்பு, சோளம், வரகு, திணை உள்ளிட்ட தானியப் பயிர்களும், 12 ஆயிரத்து 500 ஏக்கரில் எள், 8,250 ஏக்கரில் மணிலா, பச்சை பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகள் என மொத்தம் 91 ஆயிரத்து 950 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வாய்ப்புள்ளது. இதில், தேசிய பயிறு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிறு உற்பத்தியைப் பெருக்க உளுந்து உள்ளிட்ட பயறு வகை விதைகள் கிலோ 22 ரூபாயும், வரகு உள்ளிட்ட தானிய வகை விதைகள் கிலோ 12 ரூபாய்க்கும் வேளாண் துறை மூலம் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களுக்கு வேளாண் அலுவலக
உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

விவசாயி நம்பிக்கை நான்கு ஏக்கர் பயிர் செய்யும் விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை விவசாயி வீரப்பன் கூறுகையில், "நீண்ட நாட்களாக மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் காத்திருந்தேன். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என் வயலில் சொந்த மாடுகளைக் கொண்டு உழுது, நிலத்தை தயார் செய்து, கம்பு விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்' என்றார். எள் பயிரிட ஆயத்தம் மானாவாரி பட்டம் குறித்து உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், "ஆடிப்பட்டம்' மானாவாரி பட்டம் என கூறப்படுகிறது.

 மாவட்டத்தில் ஆண்டு தோறும் 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி பட்டத்தில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் ஆண்டுதோறும் தண்ணீர் திறக்க கால தாமதம் ஏற்படுகிறது. நெல் பயிர் செய்ய தாமதமாகும் என்பதால், தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில், வயல்கள் நல்ல ஈரப்பதத்தில் உள்ளன. எனவே, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் குறுகிய கால 85 நாள் பயிரான எள் பயிர் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்' என்றார்.மாவட்டம் முழுவதும் பரவலாக மழை வருவதால் ஏராளமான விவசாயிகள் நம்பிக்கையுடன் மானாவாரி பயிர் செய்யத் துவங்கியுள்ளனர்.
-Dinamalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...