Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 19, 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: ஒ.ஐ.சி அவசர கூட்டம் நடத்த கோரிக்கை!

டெஹ்ரான்:மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் நடத்தப்படும் வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(ஒ.ஐ.சி) கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு மூத்த ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் நக்வி ஹுஸைனி கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நிலைமை பீதி அளிப்பதாக உள்ளது. இங்குள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு ஈரான் தலைமை வகிக்கவேண்டும் என்றும் ஹுஸைனி வலியுறுத்தியுள்ளார்.

 சர்வதேச சட்டங்களை பகிரங்கமாக மீறும் போக்கு மியான்மரில் நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலோ, மனித உரிமை ஏஜன்சியோ பதில் அளிக்காதது ஆச்சரியமாக உள்ளது. மியான்மர் கலவரத்தை கண்டிக்க சர்வதேச அமைப்புகள் முன்வரவேண்டும். இச்சம்பவம் குறித்து மெளனம் சாதிக்கும் முஸ்லிம் நாடுகளின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று ஹுஸைனி தெரிவித்தார். மியான்மரில் மேற்கு மாநிலமான ராக்கேனில் கடந்த மாதம் துவங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு கல்வரத்தில் 650க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 80 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று மனித உரிமை
அமைப்புகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...