குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி ஹிட்லரை நல்லவராக்கி விட்டது. காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2002இல் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையின் பின்னணியில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி இருந்த உண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.
கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப்பட்டு, கரசேவர்கள் பலியான நிலையில் அன்று இரவே அவசர அவசரமாக மாநில முதல் அமைச்சர் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகளை அழைத்து ஆணையிட்ட தகவல்களை, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி என்கிற முறையில் சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் மனுவாகக் கொடுத்து விட்டார்.
சிறுபான்மையின மக்களாகிய முசுலிம்மீது வன்முறையை ஏவும் ஆணையை அந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மோடி முடுக்கி விட்டார். காவல்துறையினர் கலவரங்களைக் கண்டு கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் தான் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண்ணில் குருதி வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
ஓன்பது ஆண்டுகள் ஓடிய பிறகும்கூட
உண்மைக் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப் படவில்லை.
உண்மையைச் சொன்னதற்காக அந்தக் காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட், மோடி ஆட்சியால் சிறையில் இருக்கிறார்.
செத்துப் போனவரை சாட்சிப் பட்டியலில் சேர்த்த ஆட்சியாயிற்றே மோடியின் ஆட்சி!
சஞ்சீவ்பட் என்ற காவல்துறை அதிகாரி முதல் அமைச்சர் மோடி கூட்டிய கூட்டத்திலேயே கலந்து கொள்ளவில்லை என்று ஒரு போடு போட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொண்டார் என்பதை கே.டி. பந்த் என்ற காவலர் உறுதி செய்தார் அல்லவா! அவரைப் பிடித்து எப்படி எழுதி வாங்கியுள்ளது மோடி அரசு.
சஞ்சீவ்பட் என்னை மிரட்டினார் என்று எழுதி வாங்கியுள்ளனர். ஒரு உயர் அதிகாரியை அரசு கீழ்த்தரமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழ்மட்ட அலுவலரிடம் மிரட்டிக் கடிதம் பெற்று, கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.
மோடி ஆட்சியில் என்னதான் நடக்காது? சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சீவ் பட்டின் மனைவி என் கணவன் உயிருக்கு ஆபத்து - சிறையில் கொலை செய்து விடுவார்கள்! என்று கதறுகிறார்.
ஸ்ரீகுமார் என்ற காவல்துறை அதிகாரி (உதவி டைரக்டர் ஜெனரல்) குஜராத்தில் நானாவதி ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்தாரே!
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தும் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. குற்றவாளிகள்மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளன.
ஆனாலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை; விடுவிக்கப்பட்டனர். அரசு வழக்கறிஞர்களும் (பப்ளிக் பிராசிகியூடர்) அதற்குத் துணை போனார்கள். குஜராத்தில் ஊடகங்களும் வன்முறைக்குத் துணை போயின. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அரசு ஏற்றுக் கொள்ள வில்லை என்று ஜி.பி.நானாவதி ஆணையத்தின் முன் சொன்னாரே!
எவ்வளவு முக்கியமான சாட்சியம் இது? ஆணையம் கண்டு கொள்ளவில்லையே! குஜராத்தில் மோடி என்ற மூர்க்கக்குணம் படைத்த ஹிட்லரின் கைக்குள் நீதிமன்றம், நிருவாகம் ஊடகம் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.
இந்த நிலையில் உள்ளவர் பிரதமர் ஆவதற்கு ஆசைப்படுகிறார் - இந்தியாவே குஜராத் ஆக வேண்டுமா? சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் வாழ உரிமையற்றவர்களா?
மதச் சார்பின்மைக் கொடி இறக்கப்பட்டு, காவிக் கொடி பறக்க வேண்டுமா?
என்ன நடக்கிறது நாட்டில்? மோடி, அத்வானி உள்ளிட்டோர், அவர்கள் செய்த குற்றங்களுக்காக வெளியில் நடமாடத் தகுதியற்றவர்கள் - தேர்தலில் போட்டியிடும் தகுதியைக்கூட இழந்தவர்கள்.
சட்டம் அவர்கள்மீது பாயுமா? இந்தியா மதச் சார்பற்ற தன்மையில் பீடு நடை போடுமா? எங்கே பார்ப்போம்.
source:Viduthalai

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...