தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை “செம்மொழி” மாநாடு தீர்மானம் செயல் வடிவம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜுன் மாதம், தி.மு.க அரசு தமிழ் “செம்மொழி” மாநாட்டை நடத்தியது, அப்போது “மொழி” உணர்வைவையும், இளைஞர்கள் தமிழில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்க்கும் விதமாக, தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பின்னர் அரசு வேலைக்கு பலர் தேர்வு செய்யப் பட்டிருந்தாலும் முறையான ஆரசு ஆணை இல்லாததால் இந்த சட்டம்
நடைமுறை படுத்தப்படவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கலாம் என்று அரசு “ஆணை” வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு “நகல்” எடுக்கும் பணியாளர் ஒருவரும், தலைமை செயலகத்தில் ஒருவரும், தலைமை செயலகத்தில் “லிப்ட் ஆப்ரேட்டர்” பணியிடம் ஓன்று மட்டும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்
நிரப்பப்பட்டிருந்தது.
உயர் நிலைப்பணியிடங்களில் யாருக்கும் இந்த அடிப்படையில் பணி நிரப்பப்படவில்லை.
இந்நிலையில், நேற்று வெளியான தமிழக அரசு, உதவி தொட்க்ககல்வி அலுவலர்கல் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன உத்தரவில் தமிழில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கும் உத்தரவு செயல் படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு துறைக்கு தலா 7 இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் தமிழில் படித்தவர்களுக்கு கிடைக்கும்.
அதன்படி, கல்வி அதிகாரிகளை பொறுத்தவரை இளங்கலை பட்டபடிப்பு, மற்றும் பி.எட் தமிழ் வழியில் படித்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், முதுநிலை விரிவுரையாளர்களுக்கும் இதே அடிப்படையில் முதுகலையும் தமிழ் வழியில் படித்திருக்கவேண்டும் என்ற விதிமுறையின் கீழ் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கும் அதிகாரிகள், அப்படி தகுதியான நபர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.
34, தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பம், நவம்பர் 4-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கிடைக்கும், ஜனவரி 8-ம் தேதி போட்டித்தேர்வு நடக்கும் என்றும் அதில் தமிழில் படித்தவர்களுக்கு 7 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள அரசு “ஆணை”ப்படி இளங்கலை மற்றும் ஆயசிரியர் பயிற்சி மட்டும் தமிழில் இருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால், “உயர்நிலை” கல்வியும், “மேல்நிலை” கல்வியும் தமிழில் இருக்கவேண்டுமா…? இல்லையா…? என்பது பற்றி தெளிவான குறிப்புகள் இந்த உத்தரவில் இல்லை என்பது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பல சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளது.
தகவல் : நல்லூரான்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...