Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 16, 2011

ரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்

இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.

2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின்
சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
source:cnntamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...