எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தையடுத்து,ஏழ்மையை வரையறுக்கும் புதிய பிரமாணப் பத்திரத்தை மத்திய திட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் மத்திய திட்டக் குழு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரு நாளைக்கு கிராமப்புறத்தில் ரூ.25ம் நகர்ப்புறத்தில் ரூ.32க்கு மிகாமல் வருமானம் இருப்பின் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதமுடியும் என அதில் அது தெரிவித்திருந்தது.
இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் திட்டக் குழுவின் பதில் மனுவுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி இது தொடர்பாக புதிய பிரமாணப் பத்திரத்தை திட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யும் என்றார்.
அவர் மேலும் கூறியது : திட்டக் குழு தெரிவித்துள்ளது புள்ளிவிவரங்கள் நடைமுறைக்கு சாத்தியமானது இல்லை என்ற வாதம் அனைத்தரப்பினராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை நிர்ணயம் செய்ய புதிய வருமான வரம்பு வகுக்கப்படும்.
இது குறித்து திட்டக் குழுவின் இறுதி பதிலை எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்திட்டக் குழு தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அருணா ராய், ஹர்ஷ் மந்தர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...