Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 09, 2011

நமதூர் ஊராட்சி தேர்தல் ஒரு பார்வை!!

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே நமதூரில் ஆர்ப்பாட்டங்களும் அலும்பல்களும் ஆரம்பம்மாகிவிட்டது.முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.பரம்பரை அரசியல்வாதிகள் கூட தோற்றுவிடும் அளவிற்கு கோசங்களும் தோற்றங்களும் நமதூரில் தினம் தினம் அரங்கேரி வருகிறது.இப்போது நமதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்ப்போம்.

அ.சாதுல்லாஹ் (கத்தரிகோல் சின்னம் ): மிகுந்த அரசியல் அனுபவம் நிறைந்த தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து அப்போதைய தலைவர் தவறு செய்த போதெல்லாம் வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்களோடு இணைந்து ஊ.ம.தலைவரின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தினார் இவர் அண்ணாதிமுக முதல் விடுதலை சிறுத்தைவரை பல கட்சிகளில் இருந்துயிருக்கிறார்.எந்த ஜாமத்தையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மதினா பள்ளி ஜமாஅத் மற்றும் பெரிய பள்ளி ஜமாத்தின் ஓட்டு வங்கியை பெரும் அளவில் பிரித்துவிடுகிறார் மேலும் வெற்றி வாய்பை நிர்னயிக்கும் ஓட்டுகளாக கருதப்படும் தவ்ஹீத் குடும்பங்களின் ஓட்டுகளை முழுமையாக பெற்றுவிடுவார் என்றே சொல்லபடுகிறது.குடிசை கடைகளை கட்டிடங்களாக மாற்றி கடைத் தெருவை அழகுப்படுத்துவது  சிறந்த குடி நீர் ஆகியவை இவரின் வாக்குறுதிகலாகும்.

த.சிராஜுத்தீன் (கை உருளை சின்னம்)  : துடிப்பான இளைஞர்,எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்.பெரிய பள்ளிவாசல் ஆதரவோடும் மதினா பள்ளி ஜமாத்தின்  கனிசமான வாக்குகளை நம்பியும் களத்தில் இறங்கியுள்ளார்.த மு மு கவில் கிளை செயலாளராக இருந்த இவர் தற்போது அவர்களுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுவருகிறார்.தேமுதிக ஆதரவு இவருக்கு கூடுதல் பலம்,தேமுதிக வில் உள்ளவர்கள் அனைவரும் முன்னால் தமுமுக தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மை.சபிக்குர்ரஹ்மான்   (பூட்டு சாவி சின்னம்):  நமதூரில் எலக்ட்ரிசன் வேலை செய்யும் துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்ளார்.ஊழலற்ற ஊராட்சி என்ற கோசத்தோடு செயல்படுகிறார்.இவரின் இந்த கோசம் மக்கள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்துதிருக்குமோ என்று பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர் வெற்றிபெறும் பட்சத்தில் ஊழல் செய்தவர்களையும் ஊழலையும் வெளிக்கொண்டுவருவார் என்று நம்பப்படுகிறது.மதரசா கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்லாதின் பார்வையில் பதவி:
பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும்
இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம்.பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து ,நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை. அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான்.இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்' என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய தேர்தலில் வீண் விரயமும் வெட்டி பந்தாவும் இல்லாத நல்ல பொறுப்புள்ள தலைவரை தேர்ந்தெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.


செய்தி:அபூ தஃப்ஹிம் 

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்ளார்.ஊழலற்ற ஊராட்சி என்ற கோசத்தோடு செயல்படுகிறார்.இவரின் இந்த கோசம் மக்கள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்துதிருக்குமோ என்று பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.....

I like it very much..... But being as a person, He is nice & very friendly.

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...