Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 01, 2011

ஹவுரா-தான்பாத் இடையே டபுள்டெக்கர் ரயில் சேவை இன்று துவங்குகிறது

ஹவுரா-தான்பாத் இடையே நாட்டின் முதல் இரண்டடுக்கு(டபுள்டெக்கர்) ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இரண்டடுக்கு இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே துறை தயாரித்துள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதிகொண்ட இந்த ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, இந்த ரயில் பெட்டிகளில் இலகு எடைகொண்ட அதேநேரத்தில் அதிக உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளன.மேலும், பயணத்தின்போது அதிர்வுகள் குறைவாக இருக்கும் வகையில் இந்த பெட்டிகளில் ஏர் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பிய தர நிலைகளுக்கு இணையாக இந்திய ரயில்வே துறை வடிவமைத்துள்ள இந்த இரண்டடுக்கு ரயில் இன்று தனது சேவையை துவங்குகிறது.

கோல்கட்டாவிலுள்ள ஹவுராவுக்கும், ஜார்கண்ட் மாநிலம் தான்பாத் நகருக்கும் இடையில் இயக்கப்பட இருக்கும் இந்த இரண்டடு்க்கு ரயிலின் துவக்க விழா இன்று ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள புதிய வளாகத்தில் நடக்கிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இந்த ரயில் சேவையை கொடியசைத்து துவக்கிறார். இந்த இரண்டடுக்கு ரயிலுக்கான முன்பதிவு நேற்று துவங்கப்பட்டது. வியாழன், ஞாயிறு தவிர வாரத்தில் 5 நாட்கள்இயக்கப்பட இருக்கும் இந்த ரயில் தான்பாத்தில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஹவுராவை காலை 9.15மணிக்கு வந்தடையும்.

இதேபோன்று, ஹவுராவிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு தான்பாத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டபுள்டெக்கர் ரயிலில் 7 குளிர்சாதன வசதிகொண்ட டபுள்டெக்கர் ரயில் பெட்டிகளும், 2 ஜெனரேட்டர் பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்கார் எனப்படும் இருக்கை வசதிகொண்ட இந்த ரயிலில் ஒரு டபுள்டெக்கர் பெட்டியில் 128 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த ரயிலை மணிக்கு அதிகப்பட்சம் 110 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...