Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 28, 2011

ஆதார் அடையாள அட்டை'க்கு விண்ணப்பிக்கும் பணி துவக்கம்!

சென்னை:""தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை'யை, ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பெற வேண்டும்,'' என, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசினார்.


இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, தமிழக அளவில், "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பங்களை பெறும் பணி, சென்னை அண்ணா சாலை தலைமை தபால்நிலையத்தில் நேற்று துவங்கியது. இப் பணியை துவக்கி வைத்து, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது.

ஒருவரின் இருப்பிட நிரூபணத்திற்கு முக்கிய ஆவணங்களாக உள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை, மாநில அளவில் மட்டும் செல்லத்தக்கவை.

தற்போதைய பணி சூழலில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது மாறுதலில் செல்ல வேண்டியுள்ளது.

அப்போது அவர்களிடம், இருப்பிட நிரூபணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், ரேஷன் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது போன்றவற்றில், நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

இக்குறைகளை களையும் வகையில், தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை' வழங்கும் திட்டம், தபால் துறை மூலம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில்
இப்பணி, இன்று(நேற்று) துவக்கப்படுகிறது. கிராமப்புற மக்களிடம் எளிதில் கொண்டு செல்லும் நோக்கில், இப்பணி தபால் துறையிடம் தரப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த அடையாள ஆவணமான, "ஆதார் அடையாள அட்டை'யை ஒவ்வொரு குடிமகனும் பெறுவது அவசியம்.இவ்வாறு கோபால்சாமி பேசினார்.

போலி அடையாள அட்டைக்கு, "செக்': "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பத்தை பெறும்போது, விண்ணப்பதாரர்களின், பத்து கைவிரல் ரேகைகள், இரண்டு கருவிழிகள் மற்றும் இரண்டு மார்பளவு புகைப்படம் போன்றவை எடுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் ரத்த வகையும் பதிவு செய்யப்படும்."இவற்றின் மூலம், போலி அடையாள அட்டை பெறுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இப்பணிகளுக்காக, ஆதார் அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் தபால் நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என, சென்னை வட்ட தபால் பொது மேலாளர்(கடித மேலாண்மை) ராமசந்திரன் கூறினார். Source

சென்னை : தமிழ்நாட்டில் அஞ்சலகங்கள் மூலமாக கைரேகை, கருவிழிப்பதிவுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கோபால்சாமி பேசியதாவது:

குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் என பல்வேறு அடையாள அட்டைகள் இருந்தாலும். அவற்றை எல்லா இடங்களிலும் ஆவணமாக பயன்படுத்த முடியாது. அதிலும் பாஸ்போர்ட்டில் முதலில் அப்பா பெயர் இடம்பெற்றிருக்கும், மற்ற அட்டைகளில் இனிஷியலுடன் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். பெண்கள் என்றால் திருமணத் திற்கு முன்பு அப்பா பெயருடன் எழுதுகின்றனர். பின்னர் கணவனின் பெயர்.

இந்த மாற்றங்களை ஒவ்வொரு முறையும் விளக்கி சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் தேசிய அடையாள அட்டை தீர்வாக இருக்கும். அனைத்து தேவைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தலாம். இந்த அட்டையில் இரண்டு விதமான பிரிவுகளுடன் பதிவு ‘சிப்’ இருக்கும். ஒன்றில் வேண்டும் போது தகவல்களை படிக்கலாம், மாற்ற முடியாது. பிறப்பு, ரேகை பதிவு என நிரந்தர தகவல்கள் இன்னொரு பிரிவில் படிக்கலாம். அவ்வப்போது புதிய மாற்றங்களை பதிவேற்றிக் கொண்டே இருக்கலாம். இதற்கிடையில் இப்படி தகவல்களை தருவது ரகசியமாக வைக்கப்படுமா என்ற சந்தேகங்கள் விவாதமாகி வருகின்றன.

தகவல்கள் குறித்து ரகசியம் காப்பது அவசியம். இப்பணியை நாடு முழுவதும் கிளைகளை வைத்திருக்கும் அஞ்சலகங்கள் மூலம் செய்வதுதான் சரியானது. பொதுவாக சிற்றூரில் வாழும் மக்களுக்குதான் இருப்பிட ஆதாரம் உள்ளிட்ட சான்றுகள் கிடைப்பது கடினம். எனவே அவர்களுக்கு இந்த தேசிய அடையாள அட்டை விரைவாகவும், எல்லோருக்கும் கிடைக்க செய்வது அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார். வரவேற்று பேசிய சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் எம்.எஸ்.ராமானுஜம், Ô‘தேசிய அடையாள அட்டை Ôஆதார்Õ வழங்கும் பணியை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. அடையாள அட்டை பெற அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது. முதல் கட்டமாக அண்ணா சாலை அஞ்சலகத்தில் தொடங்குகிறோம்.

ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பூங்காநகர் தலைமை அஞ்சலகம் ஆகியவற்றின் மூலமாக வழங்க உள்ளோம். தொடர்ந்து நவம்பர் 3வது வாரத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த வசதி கிடைக்கும். ஒரு நாளைக்கு 60 பேர் என 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம்Õ’ என்றார்.

நன்றி தெரிவித்து பேசிய வாகன அஞ்சல் சேவை மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவர் டாக்டர் ராமசந்திரன், Ôதேசிய அடையாள அட்டை விண்ணப்பம் இலவசம். நிரந்த கணக்கு அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என 17 சான்றுகளில் ஏதாவது ஒன்று, குடும்ப அட்டை உள்ளிட்ட 28 முகவரி சான்றுகளில் ஒன்று, பிறந்த தேதி சான்று அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் வர வேண்டும்.

அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும்’ என்றார்.
Source

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...