Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 17, 2011

10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 60% வாக்குப் பதிவு- சென்னையில் மந்தம்

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் 10 மாநகராட்சிகளில் சென்னையைத் தவிர பிற மாநகராட்சிகளில் அமைதியான வாக்குப் பதிவு நடந்தது.

சென்னையில் பெரும் குழப்பங்களுடன் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு ஓட்டே போட முடியாமல் போனதால் அவர்கள் கடும் விரக்தியில் மூழ்கினர்.

10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

10 மாநகராட்சிகளிலும் சென்னையைத் தவிர பிற நகரங்களில் ஓரளவு நல்ல வாக்குப் பதிவு காணப்பட்டது. சென்னையில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட பெரும் குழப்பத்தால் ஆயிரக்கணக்கான வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.

சென்னையில் ஆரம்பத்தில் மந்த நிலை காணப்பட்டது. இடையில் வட சென்னையில் பெய்த பலத்த மழையால்
பல வாக்காளர்கள் ஓட்டுப் போடவே வரவில்லை. பிற்பகலுக்கு மேல்தான் சற்று வேகம் பிடித்தது.

சென்னையில் 50 முதல் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மதுரை, கோவை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் சராசரியாக 60 முதல் 65 சதவீதமும் பதிவாகின.

நெல்லை மாநகராட்சியில் 65 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
source:thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...