மிஸ்ரடா : லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது.
இச்சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்த லிபிய இடைக்கால குழுவின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் "லிபியாவில் இஸ்லாமிய ஷரீயா சட்டங்களே இனி ஆளும்" என்றும் "அதற்கு மாற்றமான சட்டங்கள் அகற்றப்படும்" என்றும் தெரிவித்தார்.
மேலும் லிபியா ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், "ஷரீயாவை முதன்மை சட்டமாக வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?" என்று வினா எழுப்பிய ஜலீல் "கடாபியின் ஆட்சி முறையில் பலதார மணம் தடை செய்யப்பட்டு இருந்தது. அது ஷரீயாவுக்கு மாற்றமாக இருப்பதால் பலதாரமணத்தை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து அகற்றப்படுகிறது" என்றார்.
source:inneram.com

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...