Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2013

எகிப்தில் ராணுவ புரட்சி:வீட்டுச் சிறையில் முர்ஷி! இடைகால அதிபாரானார் அட்லி மன்சூர்

எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மோர்சியை ராணுவம் அதிரடியாக நீக்கியுள்ளது. அவரை ராணுவம் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் முடக்கிவிட்ட ராணுவம், மூத்த நீதிபதி மன்சூரின் தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.

துனீசியாவில் ஆரம்பித்த அரபு வசந்தம் பல அரேபிய நாடுகளுக்கும் பரவி நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர்களை பதம் பார்த்தது. அந்த வகையில் எகிப்து நாட்டின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கும் மக்கள் போராட்டத்தால் பதவி விலக நரேந்தது. இதையடுத்து அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. அதில், இஸ்லாமிய கட்சியான முகம்மது மோர்ஸி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவரையும் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந் நிலையில், மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது ராணுவம், இந்த கெடு நேற்றிரவு முடிந்த நிலையில் ராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது. அவரை பதவி விலக வைத்து, வீட்டுச் சிறையில் அடைத்தது.எகிப்தின் பல்வேறு பகுதிகளில் முர்சியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 14 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முர்சியை ராணுவம் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டின் தலைமை நீதிபதி அட்லி மன்சூரை இடைக்கால அதிராக ராணுவம் நியமித்துள்ளது. இதையடுத்து அதிபர் பதவி விலகிவிட்டதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் விரைவில் தேர்தல நடைபெற நடவடிக்‌கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இது ராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு என மோர்சி அறிவித்துள்ளார். மேலும் எங்களிடமிருந்து மக்கள் புரட்சியை ராணுவம் பறித்துக் கொண்டுவிட்டது என்றும்
மோர்சி தனது இணையத்தளத்தில் கூறியுள்ளார். அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்த சில நிமிடங்களில் அவரது இணையத்தளத்தையும் ராணுவம் முடக்கிவிட்டது.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யா அல்லாஹ் எகிப்தில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவாயாக

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...