Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 18, 2013

கல்வி பயின்றதால் மாலாமாவை தாக்கவில்லை -தாலிபான்கள்

இஸ்லாமாபாத்: தலையில் குண்டடிபட்டு குணம் அடைந்து இங்கிலாந்து பள்ளியில் படிக்கும் பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுப்சாயை நாட்டுக்கு திரும்பி வந்து மதரஸாவில் சேர்ந்து படிக்குமாறு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்து வருகிறார்.கடந்த வாரம் அவர் ஐ.நா.வில் உரை நிகழ்த்தினார்.

இந்நிலையில் தாலிபான்  தலைவர் அத்னான் ராஷித் மலாலாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நீ மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நான் அறிவுரை வழங்குகிறேன். இங்கு வந்து உங்கள் ஊரில் உள்ள ஏதாவது பெண்கள் மதரஸாவில் சேர்ந்து இஸ்லாமிய கலாச்சாரம், அல்லாஹ்வின் புத்தகத்தை படிக்க வேண்டும். உன் பேனாவை இஸ்லாத்திற்காக பயன்படுத்து. நம்மை அடிமைப்படுத்த விரும்பும் சக்திகளை அம்பலப்படுத்து. நீ தாலிபான்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் தான் உன்னை தாக்கினோம். நீ பள்ளிக்கு சென்றதாலோ அல்லது கல்வியை விரும்பியதாலோ உன்னை தாக்கவில்லை. தாலிபான்களோ அல்லது முஜாஹிதீன்களோ ஆண், பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. நீ எதிரிகளின் கையில் உள்ளாய். பிறரின் பேச்சைக்
கேட்டு நீ பேசுகிறாய் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...