Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2013

ஃபலஸ்தீனுக்கு இந்தியா நிதி உதவி!

புதுடெல்லி: மேற்காசியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஃபலஸ்தீனுக்கு இன்று செல்லவிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத், இந்தியாவின் உதவியாக 10 லட்சம் டாலர் தொகையை அந்நாட்டின் பிரதமர் டாக்டர் ராமி அப்துல்லாஹ்விடம் அளிப்பார்.ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நேற்று இ.அஹ்மத், ஜோர்டானில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மஹ்மூத் அப்பாஸ், கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த 10 லட்சம் டாலர் உதவி தொகையை இ. அஹ்மத் வழங்குகிறார்.ஃபலஸ்தீன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ரியாத் மாலிகி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நபீல் ஷாத், ஹெப்ரான் ஆளுநர் கமால் ஹுமைத், ஜெரிக்கோ ஆளுநர் மாஜித் ஃபித்யானி ஆகியோருடன் இ.அஹ்மத் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை மஸ்ஜிதுல் அக்ஸாவில்
நிறைவேற்றுவார். இந்தியா-ஃபலஸ்தீன் இடையேயான உறவை பலப்படுத்த இந்த சுற்றுப்பயணம் உதவும் என்று இ.அஹ்மத் கூறினார்.

 Source : thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...