Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2013

தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது!

தெலுங்கானா பகுதி மக்களின், அரை நூற்றாண்டு கால கனவு, நேற்று நனவானது. நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயமாகிறது. ஆந்திராவை உடைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க, ஐ.மு., கூட்டணி ஒருங்கிணைப்பு குழு மற்றும் காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதனிடையே தெலுங்கானா தனி மாநிலமாக அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து, எம்.எல்,ஏ., எம்.பி.க்கள் பதவி விலகி வருகின்றனர்.

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தெலுங்கான தனி மாநிலமாக பிறப்பெடுக்க இன்னும் 122 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ராயபாட்டி சாம்பசிவராவ், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன்னவடிவரம் சதீஷ்குமார், ஜம்மலமடுகு ஆதிநாராயணராவ், ராமசந்திராபுரம் தோட்டாநரசிம்மம் ஆகியோர் உட்பட பலரும் பதவி விலகியுள்ளனர். அத்துடன் ஆந்திராவின் திருப்பதி, கர்னூல், நெல்லூர், விசாகப்பட்டினம், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மையை ஐக்கிய ஆந்திரா கூட்டு நடவடிக்கை
குழுவினர் எரித்துள்ளனர். மேலும் பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுவதுடன், மத்திய அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்த்தையும் தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டும் பதட்டமான சூழ்நிலையே காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...