Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 29, 2013

பெட்ரோல் பங்கில் சமையல் எரிவாயு நிரப்பும் முறை விரைவில் -மத்திய அரசு

பெட்ரோல் பங்க்கிலேயே சமையல் எரிவாயு நிரப்பிக் கொள்ளும் முறையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் நான்கு முக்கிய மெட்ரோ நகரங்கள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்த 5 கிலோ எரிவாயு நிரப்பும் சிலிண்டர்கள் குறிப்பிட்ட நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சோதனை முறையாக செயல்படுத்தப்பட உள்ள இந்த முறை மக்களின் வரவேற்பை பெறும்பட்சத்தில் மெல்ல மெல்ல அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மாநில எரிபொருள் விற்பனையாளர்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், அவர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் எரிவாயுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த புதிய எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு தொழில்துறை நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயம் இத்திட்டத்தை அரசின் நேரடி மானிய திட்டத்தின் மூலம் தண்ணீர் கேன்கள் மொபைல் ரீசார்ஜ் கார்டுகள் போன்ற எரிவாயு நிரப்பும் சிலிண்டர்களை விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கி உள்ளன.

5 கிலோ சிலிண்டர்கள் தாரளமாக விற்பனை செய்யப்படும் திட்டத்தின் மூலம் 2 முதல் 3 கிலோ சிலிண்டர்களை பயன்படுத்தும் பெருநகரங்களில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள், இளம் பணியாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் பயன்பெற உள்ளனர். இவர்கள் மானிய விலையில் பெறும் சிறிய சிலிண்டர்களில் முறைகேடாக எரிவாயு நிரப்ப ரூ.150 அல்லது அதற்கு மேல் செலுத்தி வருகின்றனர். விசேஷங்களின் போது அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் இந்த எரிவாயு நிரப்பும் திட்டம் உதவிகரமாக
இருக்கும். கேஸ் ஏ‌ஜென்சிகளின் வேலைநேரம் அல்லாத சமயங்களிலும் தாமாகவே சென்று சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பிக் கொள்வது பெரும் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது டீலர்கள் அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பதையும் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெட்ரோல் பங்க்கள் பாதுகாப்பு உரிமங்களை பெற்றுக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5 கிலோ சிலிண்டர் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் முதலில் இந்த திட்டத்தை குறிப்பிட்ட விலை நிர்ணயத்தில் டீலர்கள் மூலமே விற்பனை செய்யலாம் எனவும், இதற்காக டீலர்கள் கொள்கைகளையும் மாற்றி அமைக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...